Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Mar 25, 2018

பிளஸ் 2 தேர்வு முடிவு தாமதமாகுமா?

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கழக மாநில தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பள்ளிக்கல்வி இயக்குநரை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளனர். இதுகுறித்து பொதுச்செயலாளர் மனோகரன் கூறியதாவது:
விடைத்தாள் திருத்தும் பணியை கோடைகால விடுமுறையில் நீட்டிக்கக் கூடாது எனவும், கோடைகால விடுமுறையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.  இதுதொடர்பாக தேர்வுத்துறையை அணுகியபோது விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.11ல் தொடங்கி மே20 வரை நீடிக்கும். இந்த கால அட்டவணையில் மாற்றம் இல்லை என தெரிவித்தனர்.எனவே மே 1ம் தேதிக்கு மேல் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்போம் என்றஎங்கள் நிலையை தெளிவாக தெரிவித்துள்ளோம் என்றார்.

பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே மாதம் 2வது வாரத்தில் வெளியிடப்படுவது வழக்கம். தற்போது மே 1ம் தேதிக்கு பிறகு விடைத்தாள் திருத்த மாட்டோம் என ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் குறித்த காலத்தில் பிளஸ்2 முடிவுகள் வெளியாகுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி