ஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில்ஒரே நேரத்தில் 4 போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2018

ஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில்ஒரே நேரத்தில் 4 போராட்டம்


டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4 பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால்  டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ளடிபிஐ வளாகத்தில் நேற்று காலை 10 மணி முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள்,  பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் என 4 பிரிவினராக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அவர்கள்  ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தனித்தனிக் குழுக்களாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு  குவிக்கப்பட்டனர்.ஆசிரியர் தகுதித் தேர்வை 2013ம் ஆண்டு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் ஒருகூட்டமைப்பாக கோஷம் போட்டபடி வந்தனர்.அவர்கள் ஆசிரியர் தேர்வு  வாரிய தலைவரை சந்திக்க காத்திருந்தனர்.

அது குறித்து அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 93 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். 5 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்னும் பணி நியமனம்  இல்லை. பள்ளிக் கல்வி அமைச்சர் விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று ஜனவரி மாதம் தெரிவித்தார். தொடக்க கல்வித்துறை, பள்ளிக்  கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இல்லை என்றால், சட்டப் பேரவையை  முற்றுகையிடுவோம் என்றார்.

அடுத்ததாக 2017ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் சார்பில்நடத்த முற்றுகை போராட்டத்தில்  சென்னையை சேர்ந்த வெங்கட் கூறியதாவது:கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி–்த்தேர்வில் தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் எழுதினர். அதில் 34 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பணி  ஆணை கிடைக்கும் என்று காத்திருக்கிறோம்.

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதிச் சான்று வழங்கவேண்டும். தாள் ஒன்றுக்கு சான்று சரிபார்ப்பு நடத்த வேண்டும் என்று  கேட்டு பள்ளிக் கல்வி இயக்குநரை சந்திக்க வந்தோம். அவரை சந்தித்த பிறகு ஒரு மாதம் காத்திருக்க சொன்னார்என்றார்.

சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதியவர்கள் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறியதாவது:பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர்களுக்கான 1325 இடங்களை  நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி போட்டித் தேர்வு  நடந்தது. அதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினோம். தேர்வு முடிந்து 6 மாதம் கடந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை.  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய உதவி பேராசிரியர் போட்டித் தேர்வில் குளறுபடிகள் நடந்ததால், சிறப்பு ஆசிரியர் தேர்வில் இடம் பெற்ற ஓஎம்ஆர்  தாளை மீண்டும் திருத்த முடிவு செய்துள்ளோம். விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஆர்பி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால்  முடிவுகள் வெளிவரும் காத்திருப்போம் என்று செல்வம் தெரிவித்தார்.

முதுநிலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வுஎழுதி பணி நியமனத்துக்காக காத்திருப்ேபார் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 3300 நிரப்ப போட்டித் தேர்வு நடந்தது. அதில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து2300 பேருக்கு பணி  நியமனம் வழங்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ளவர்களுக்கு சான்று சரிபார்–்ப்பு முடிந்துள்ள நிலையில் பணி நியமன ஆணை இன்னும் வழங்கவில்லை.  ஆதிதிராவிடர் நலத்துறையில் 220 பணியிடங்கள் உள்ள நிலையில் அந்த இடங்களில் எங்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள  வந்தோம். விரைவில் முடிவு தெரிவிப்பதாக டிஆர்பிஅதிகாரிகள் ெ தரிவித்துள்ளனர். அதனால்முதுநிலை பட்டதாரி ஆசிரியரகள் கலைந்துசென்றனர்.

போலீசாரை வெளியே நிற்க வைத்த அதிகாரிகள்

மேற்கண்ட நான்கு பிரிவினரும் டிஆர்பி அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டு இருந்ததால் நுங்கம்பாக்கம் போலீசார் அங்கு வந்தனர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி உரிய அதிகாரிகளிடம் பேச ஏற்பாடு செய்தனர். ஆனால் டிஆர்பியின் தலைவர் நந்தகுமாரிடம் பேச வேண்டும்  என்று போராட்டக் காரர்கள் கேட்டுக் கொண்டனர்.

இது குறித்து டிஆர்பி தலைவருக்கு தகவல் தெரிவிக்க சென்ற போலீஸ் அதிகாரிகளை உள்ளே விடாமல் ெவளியில் காக்க வைத்தனர் டிஆர்பி  அதிகாரிகள். மேலும், டிஆர்பி  தலைவர் நந்தகுமார் முக்கியமான மீட்டிங்கில் இ ருப்பதால் அதிகாரி ஒருவர் பேச்சு வார்த்தை நடத்துவார் என்று  போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி டிஆர்பி உறுப்பினர் செயலாளர் உமாவை பேச அழைத்தனர். ஆனால் அவர் வழக்கம் போல மனுக்களை  வாங்கிக் கொண்டு பதில் கூறி அனுப்பி விட்டார். இது வழக்கமாக நடப்பதுதான். இவ்வளவு களேபரத்துக்கும்இடையிலும் தலைவர் நந்தகுமார் அவர்  அறையில் இருந்து வெளியில் வரவே இல்லை. அதனால் பட்டதாரிகள் அதிருப்தி அடைந்தனர்.

38 comments:

  1. New posting illai endru minister sollukirar

    ReplyDelete
  2. ellam fraud payaluga.........polytechnic madhri....panam kudhtha vegama varuvanga.....

    ReplyDelete
  3. firstla .......trb .....la ellaraum....jail..la podanum...ethnai per...lifela game play panranga..

    ReplyDelete
    Replies
    1. Brother trb enna seiyum 2013 tet weightage opposite court ku trb poga sollicha govt kondu vantha scheme court change pannala so court ala 4 years wast reason candidates 2017 tet certificate will issued after 2013 posting process paper one verification within two month no vacancy so delay tet nadantha posting podasolvinga illana en nadathalambinga enna niyam ithu pg trb 2nd list enbathu trb given a chance for us we should not have any rights to force trb to do all urgently because it's also delaying by court so court ku poi trb time govt time 4year for tet 6months for pg nu waste panna vacha candidates should wait two more month atha vitutu poratum manu tharathunu asingapatuthathiga

      Delete
    2. Polytechnicla panam vilayaandathukku yaar sir kaaranam

      Delete
    3. Idai tharagara seyalpattavanka Yentha departmentla velai paarththanka sir

      Delete
    4. Pani niyamanam nermayaaka nadanthaal avunka ethukku sir trb vaasalukju poraattam panna poraanka

      Delete
    5. Delay aaha aaha thavaru nadakkumo entra payamthan poraattaththukku kaaranam sir

      Delete
    6. Brother it's govt policy you see what posting get delay except polytechnic all second list it's govt decision it give one more chance to you already your chance is over why you are not entered in first list just think that's not govt mistake it's yours so better to wait up to govt decision OK va

      Delete
    7. We are not in second list. We are in welfare list. At the time of notification they offered for dse and other departments. First they appointed for dse and now for other department. Both are different and many candidates are in first list. They missed the job by age seniority. So don't hurt us. They r not giving chance to us. They need to fill the vacancy in other dept. That's y called us. Please think before u speak. Don't discourage the aspirants

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  4. *GROUP - 2*

    *CCSE II தேர்வு* 2000 திற்கும் அதிகமான பணியிடங்கள் தேர்வு அறிவிப்பு வெளிவர விருக்கிறது *(CCSE II Interview+ CCSE II Non interview)* ஒரே தேர்வாக அமைய வாய்ப்பு அதிகம் அதற்கான பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது . *CCSE II தேர்வில் (Municipal commissioner, Sub Register, Local Fund Auditor, Junior Employment Officer, Revenue Assistant*, என பல முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் இடம்பெற்றுள்ளன.


    TET PAPER1 & 2 TEST BATCH : 75 UNIT TEST &10 FULL TEST

    GROUP 2 TEST BATCH : 50 UNIT TEST &5 FULL TEST

    தேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில்இருக்கும்....

    பிறமாவட்ங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் ...

    *SALEM COACHING CENTRE* ,
    VOC NAGAR, OPP SURAMANGLALM POLICESTATION,SALEM- 636005 PH:9488908009; 8144760402

    SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/

    YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

    ReplyDelete
  5. Tet posting potamatanga intha minister solla matumthan seivar seyalla Seiya matar tnpsc la exam eluthi vera velaiku ponga nanbargla poratam panalum onum nadakathu

    ReplyDelete
  6. *🖥 கணினி அறிவியல் பாடத்திற்கு பகுதிநேர ஆசிரியர்களாக(Part Time Teachers PT) தற்போது வரை தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்? CM CELL REPLY:Date: 26/03/2018*

    *🖥 Number of Temporary Computer Part Time Instructors Working in Tamilnadu Govt Schools: CM CELL REPLY: 🗓Date: 26/03/2018*


    📚 https://kaninikkalvi.blogspot.in/2018/03/part-time-teachers-pt-number-of_27.html?m=1

    *⚠More Official Computer Science B.Ed Related News Visit only* - 🖥kaninikkalvi.blogspot.in📚

    *🚀Share This All CS B.Ed Graduates 🙏🏻*

    ReplyDelete
    Replies
    1. Oru time anupunga.ethuku ithanai time

      Delete
    2. 🅱💢 பள்ளிக்கல்வி - மேல்நிலைப் பள்ளிகள் - தொழிற்கல்வி ஆசிரியர்(🖥கணினி அறிவியல்)117 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.01/01/2018 முதல் 31/12/2018 முடிய ஒரு வருட தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்படுகிறது📝

      117 தற்காலிக கணிணி அறிவியல் ஆசிரியர்களின் முழுவிவரங்கள் அடங்கிய பட்டியல்📝

      117 Computer Science Teachers Post  One Year(2018) Continuation Order Released 117 Teachers Complete List With Full Details) 👉 Click Here To Download(PDF)

      🛡 https://kaninikkalvi.blogspot.in/2018/03/117-01012018-31122018-117-one-year2018.html?m=1

      🅱💢1880 கணினி பயிற்றுநர் தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2018 முதல் 31.12.2018 முடிய ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு 👉 Click Here To Download(PDF)

      🛡 https://kaninikkalvi.blogspot.in/2018/03/1880-01012018-31122018.html?m=1

      ⚠More Official News 📝

      🖥kaninikkalvi.blogspot.in📚

      🚀Share To All CS Teachers Groups

      Delete
  7. Sc(science)-3 place dindukkal,rajapalalayam.pl contact 9367619686

    ReplyDelete
  8. BT maths-TET pass above 90 mark.madurai.9367619686

    ReplyDelete
  9. Thevidaya mavanunga evlou per valkyail vilayaduranuga...

    ReplyDelete
  10. Government sariyana murayil pani seivathu ellai .. patichium , velai vaippu arasu thurail erunthum posting podamadranga.. Revenue department LA 2,00,000 posting , teacher's job LA 15000 posting kaliya erukku...
    Job kututha thana nadu munnukku varum ... Padikka thireyathu summa urasuthanathulam ennakki minister eruntha administration epti panrathunu athungalukku epati therium... Government LA kasu ella .. Ana evanunga vetu assets (soththu) matum athikama akuthu... Atchiya kalachittu atuthavanukkavthu vaziya vetungada avanavthu vanthu Sarita panranavthu pappom...

    ReplyDelete
  11. அவர் எந்த மீட்டிங் .ல் இருந்தாலும் கண்டிப்பாக வர வேண்டும், ஆனால் நம்மை ஏமாற்ற பார்க்கிறார்கள்.. டீலிங் பேசி முடிச்சிட்டு எங்களை டீலா ல விட்டு விடாதிங்க

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. அரசு ஆணை 56ல் வேலைக்கு ஆட்கள் நியமிக்காமல் தனியாரிடம் Job work கொடுக்க வாய்ப்புள்ளது ... அதை 56 ஐ கண்டித்து அரசு ஊழியர் ஆசிரிய கூட்டமைப்பு போராட்டம் நடத்தியது

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Hey mundam ethuna time annupuva

    ReplyDelete
  16. TRB போயி சேர்மன்ன பாருங்கனா SECURITY ya பாத்துகிட்டு வந்துருக்கு இதுங்க 2013 2017 Weightage groups

    Sudu sorana irruikkutha ithungaluikku...

    ReplyDelete
  17. நேற்று இரவு 7.30 மணியளவில் கல்விச்செய்தியில் வந்த செய்தி “இந்த வருடம் ஆசிரியர் பணிநியமனம் கிடையாது” என்ற செய்தி இப்பொழுது காணவில்லை எங்கு சென்றது அந்த செய்தி ???!!!!!!!!!!!

    ReplyDelete
  18. https://youtu.be/TJnIhs01rGo
    2013 தேர்வு எழுதியவர்கள் போராட்டம் வீடியோ இணைப்பு தந்தி டிவி

    ReplyDelete
  19. Padichavangala palivanguna nadu velangidum....😧😟😩😣

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி