Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு "மு. க. ஸ்டாலின்" அவர்களை சந்தித்துகணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு..!

  

17-03-2018  

  இடம் : அண்ணா அறிவாலயம் (சென்னை) 

  தமிழகத்தில், கணினி அறிவியல் பாடத்தை பிரதான பாடமாக படித்து இளநிலை (ம) முதுநிலை பட்டம் பெற்று அவற்றில் பி.எட்., பட்டம் முடித்து 50,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி "கணினி ஆசிரியர்" பணிக்காக எட்டு வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறோம்.
  கணினி அறிவியலில் பி.எட்., பட்டம் பெற்றவர்களுக்கு TET, TRB, AEEO மற்றும் DEO தேர்வில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. NCTE-ன் விதிகளின்படி எந்தவொரு பாடப்பிரிவிலும் பி.எட்., பட்டம் பெற்றிருந்தால் TET ஆசிரியர் தகுதி தேர்வு எழுத போதுமானது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் TNTET, AEEO, DEO, TRB போன்ற ஆசிரியர் தேர்வுகளுக்கு கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கும் நிகழ்வாக உள்ளது.

  கணினி அறிவியல் பாடத்தை பிரதான பாடமாக (Major Subject) எடுத்து படித்ததனால் எங்களால் 1-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு சிறப்பாக கற்பிக்க முடியும்; 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை சிறப்பாக கற்றுக்கொடுத்தால் தான் +1 மற்றும் +2 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தின் முழுமையான அறிவை மாணவர்கள் பெற முடியும்

🛰  பிரதான கோரிக்கைகள் :-

1) கணினி அறிவியலை பிரதான பாடமாக (Major Subject) எடுத்து படித்து B.Ed., பட்டம் பெற்றவர்களை பள்ளிக்கு  ஒரு  கணினி ஆசிரியர்  என்ற வகையில் பணி நியமனம் செய்ய வழிவகை செய்திட வேண்டும்.

2) B.Ed., பட்டம் அடிப்படை தகுதியாகக் கொண்ட ஆசிரியர் தேர்வுகளான TET, AEEO, DEO அனைத்திற்கும் கணினி அறிவியலில் பி.எட்., படித்தவர்களை இந்த தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.

3) தற்பொழுதுள்ள அசாதாரண சூழ்நிலையில் கணிப்பொறியின் பயன்பாடு மிகையாக உள்ளது. எனவே அதற்கு ஏற்ப கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் விழிப்படையச் செய்ய அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்து பி.எட்., கணினி ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம் இவர்களின் கணினி பற்றிய அடிப்படை அறிவு மற்றும் பயன்பாட்டு அறிவை மேம்படுத்த முடியும்.

  இவண் :-
 தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்  
பதிவு எண் ® 655/2014

 நிகழ்வு தலைமை :-
  (மாநில நிர்வாகிகள்)
 திரு. அகிலன்
     (மாநில செயலாளர்)
 திரு. வேலு
        (மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்)
 திருமதி. ஹேமாராணி
       (மாநில மகளிரணி செயலாளர்)

10 comments

 1. JUN- 2018 computer science 6-10th kandipaka vara vendum

  ReplyDelete
 2. Computer science teachers ku vidiyal vara vendum

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் தோழர்களே

  ஒவ்வொரு முயற்சியும்
  வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டே யிருப்பதுக்குச் சமம்.

  முயன்றால் சாதிக்க
  முடியும்.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. Kandipa intha year la ethavathu Matram varum... friends...

  ReplyDelete
 6. This year computer teacher posting varum....

  ReplyDelete
 7. Vantha paravala friends ....... Thank you sir unnka muyarchiku ......

  ReplyDelete
 8. எதிர் கட்சி தலைவரால் இப்பொழுது எந்த பயனும் கிடைக்காது இதனால் ஆளும் கட்சி ஆட்கள் மேலும் கோபம் அடைவார்கள்...இதை தவிர்க்கலாமே...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives