பள்ளி நிதி செலவினம்: அறிக்கை தயாரிப்பு மும்முரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2018

பள்ளி நிதி செலவினம்: அறிக்கை தயாரிப்பு மும்முரம்

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், ஏப்., 20ம் தேதியுடன் முடிவடைகின்றன. மற்ற வகுப்புகளுக்கும், ஏப்., 19ம் தேதிக்குள் மூன்றாம் பருவ தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முன்கூட்டியே வழங்க திட்டமிட்டுள்ளதால், கடந்தாண்டு போல அல்லாமல், தேர்வுகளும் விரைவாக நடத்தப்படுகின்றன.அதற்குள் பள்ளிகளுக்கு, அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதித்தொகைக்கான, வரவு-செலவு குறித்த அறிக்கை தயாரித்துசமர்ப்பிப்பது வழக்கம். இதில், இடம்பெற்ற தகவல்கள் ஆதாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில், கல்வித்துறை சார்பில், தடையின்மை சான்று வழங்கப்படும்.இது பெற்றால் மட்டுமே, அடுத்த கல்வியாண்டில் தொடர்ந்து, அரசின் திட்டங்களில் பங்கேற்க முடியும். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, ஆண்டுதோறும், 7,500 ரூபாய், பராமரிப்பு செலவினத்திற்கு வழங்கப்படுகிறது.

அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், 15 ஆயிரம் ரூபாய், பராமரிப்புதொகையாக, ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுதவிர, ஆண்டுவிழாவுக்கு பிரத்யேக நிதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த தொகையை கொண்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்து செலவினங்களுக்கும், ரசீது இணைத்து அறிக்கை தயார் செய்ய வேண்டியது அவசியம்.இப்பணிகள் விறுவிறுப்பாக நடப்பதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,'பள்ளி வேலை நாள் முன்கூட்டியே முடிவதால், நிர்வாக பணிகளும் முடிக்க வேண்டியுள்ளது. எனவே, பள்ளி வரவு-செலவுஅறிக்கை தயாரித்து, கல்வித்துறை திட்ட அலுவலகங்களில், 'ஆடிட்டிங்' சமர்ப்பிக்க, பணிகள் நடக்கின்றன' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி