My Blog Search

Search your News

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

முதுநிலை மருத்துவம் கவுன்சிலிங் தேதி மாற்றம்

முதுநிலை மருத்துவ படிப்புக்கான, கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டுள்ளது.முதுநிலை மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 50 சதவீத இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கான கவுன்சிலிங்கை, மத்திய சுகாதார துறையின், சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது. அதன்படி, கவுன்சிலிங்கிற்கான நடைமுறைகள், 17ல் துவங்கின. நேற்றும், இன்றும், முதற்கட்ட கவுன்சிலிங் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில் பங்கேற்போர், தங்களுக்கு விருப்பமான இடங்களை தேர்வு செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. இடங்களை தேர்வு செய்யும் நடைமுறைகளிலும், சில குழப்பங்கள் ஏற்பட்டன.

அந்த பிரச்னை சரி செய்யப்படுவதால், முதற்கட்ட கவுன்சிலிங், நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஏற்கனவே அறிவித்தபடி, ஏப்., 9, 10ம் தேதிகளில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

 

kalviseithi viewers

Most Reading

Tags