தரம் உயர்த்த தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை? பட்டியல் அனுப்ப உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2018

தரம் உயர்த்த தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை? பட்டியல் அனுப்ப உத்தரவு

தரம் உயர்த்தப்படும் தகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரும் கல்வியாண்டில், 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும்,
100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.நடுநிலைப்பள்ளிகள் பொறுத்தமட்டில், தொடக்க கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, தொடக்க கல்வித்துறையோடு இணைந்து, மாவட்ட வாரியாக தகுதிவாய்ந்த பள்ளிகள் பட்டியல் தயாரிக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட உள்ள நடுநிலைப் பள்ளிக்கு, 3 ஏக்கர் நிலம் இருப்பது அவசியம்.

புறம்போக்கு, தானமாகவழங்கப்பட உள்ள நிலங்களை, கணக்கு காட்ட இயலாது. பொதுமக்கள் பங்கு தொகையாக, அரசு கணக்கில் ஒரு லட்சம் செலுத்த வேண்டும்.உரிய கட்டமைப்பு வசதி, கழிப்பறை, குடிநீர் வசதி கொண்ட பள்ளிகளே, தரம் உயர்த்த பரிந்துரைக்க வேண்டுமென, இயக்குனர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8 comments:

  1. Appa entha school lum tharam uyarthapovthu Ella... Ellam pechithan seyalla ethum Ella... Super govt...

    ReplyDelete
  2. Arasiyal thalaieeedu illamall irukkummaaa.....

    ReplyDelete
  3. oru loosu daily press meetla ethavathu ularume enga antha mental naye

    ReplyDelete
    Replies
    1. Loosu payele give some respect unaku ennaada problem naye

      Delete
  4. அப்போ(து) ல இருந்து சொல்ரானே தவிர பாம்ப கண்லயே காட்ட மாட்றானேய்யா...

    பேட்(டி) பெல்லோஸ்.

    ReplyDelete
  5. ரூல்ஸ் போடுவானுக ஆனா அமைச்சர் ரெக்மன்ட் செய்தா வடனே தரம் உயர்த்தி விடுவார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி