இன்று முதல் நீட் தேர்வு பயற்சி மையம் துவக்கம்: சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தங்கும் வசதியுடன் பயிற்சி வகுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2018

இன்று முதல் நீட் தேர்வு பயற்சி மையம் துவக்கம்: சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தங்கும் வசதியுடன் பயிற்சி வகுப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியதை அடுத்து, பயிற்சி வகுப்புகள் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், இன்று முதல், நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் மீண்டும் துவக்கப்படுகின்றன. கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. இது குறித்து, முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டத்தில் கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் வெள்ளியணை, அய்யர்மலை, கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி, தோகைமலை, தரகம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மீண்டும் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் துவங்குகின்றன.

இதில் 108 மாணவ, மாணவியர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களும் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கு சென்னையில் உள்ள தனியார் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், வீடியோ கான்பிரன்சிங் மூலம் பயிற்சியளிக்க உள்ளனர். இதில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் நான்கு தொகுதியாக உள்ள நீட் தேர்வு பயிற்சி புத்தகம் இலவசமாக வழங்கப்படும். இது தவிர, பிளஸ் 2 பாடத்தில் சிறந்த விளங்கும் 48 மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி வகுப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வரும் 11 முதல் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி