Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Apr 9, 2018

பி.எப்., தொகை அறிய மூன்று எளிய வழிகள்!


தொழி­லாளர் சேம­நல நிதி­யான, பி.எப்., உறுப்­பி­னர்கள், தங்கள் கணக்கில் சேர்ந்­துள்ள தொகை பற்­றிய விப­ரத்தை, உமாங் செயலி மற்றும் பி.எப்., இணை­ய­தளம் மூலம் எளி­தாக அறி­யலாம்.
அரசு சேவைகள் தொடர்­பான தக­வல்­களை, ஓரி­டத்தில் பெற உதவும் உமாங் (UMANG app) செய­லியில், பி.எப்., சேவையை தேர்வு செய்து, அதன் பின் ஊழி­யர்கள் சார்ந்த சேவைகள் பகு­தியை அணு­கு­வதன் மூலம்இந்த தக­வலை பெறலாம்.முதல் முறை பய­னாளி என்றால் உமாங் செய­லியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதே போல, பி.எப்., இணையத்தில் நுழைந்து, இ-பாஸ்புக் இணைப்பை, ‘கிளிக்’ செய்ய வேண்டும். இதே போல பி.எப்., இணை­ய­த­ளத்தில் நுழைந்து இ-பாஸ்புக் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். (https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp). இதன் பிறகு நிரந்­தர கணக்கு (யு.ஏ.என்) எண் மற்றும் பாஸ்­வேர்டை டைப் செய்ய வேண்டும். பின்னர் உறுப்­பினர் ஐ.டியை கிளிக் செய்து பி.எப்., தொகை விப­ரத்தை அறி­யலாம்.உமாங் செயலி மூலமே குறுஞ்­செய்தி அல்­லது மிஸ்டு கால் மூலம், பி.எப்., தொகையை அறிந்து கொள்ளும் வழி­மு­றையை பற்­றியும் தெரிந்து கொள்­ளலாம்.

நிரந்­தர கணக்கு எண் உள்ள­வர்கள், பதிவு செய்த மொபைலில் இருந்து, 77382 99899 என்ற எண்­ணுக்கு குறுஞ்­செய்தி மூலம் கோரிக்கைஅனுப்பி, தகவல் பெறலாம்.நிரந்­தர கணக்கு எண்­ணிற்­கான, யு.ஏ.என் வலை­வா­சலில் பதிவு செய்­துள்ள உறுப்­பி­னர்கள், 011 -2290 1406 என்ற எண்­ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும், தகவல் பெறலாம். இதன் மூலம், பி.எப்., தொகை மற்றும் கடை­சி­யாக செலுத்­தப்­பட்ட தொகையை அறி­யலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி