ரெயில் டிக்கெட், உறுதி செய்யப்படுமா? - ரெயில்வே இணையதளமே இனி சொல்லி விடும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2018

ரெயில் டிக்கெட், உறுதி செய்யப்படுமா? - ரெயில்வே இணையதளமே இனி சொல்லி விடும்

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளத்தில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில்களில் மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரம் படுக்கைகள் உள்ள நிலையில்,
தினந்தோறும் சுமார் 13 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.இதனால், பல்லாயிரக்கணக்கான டிக்கெட்டுகள் காத்திருக்கும் நிலை டிக்கெட்டுகளாகவும், ஆர்.ஏ.சி. டிக்கெட்டுகளாகவும் அமைகின்றன. அந்த டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை தெரிந்து கொள்ள முடியாதநிலை இருந்தது.இந்நிலையில், அத்தகைய டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளமே யூகித்து சொல்லி விடும். அதற்கேற்ப இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே தகவல் சேவை மையம் உருவாக்கியபுதிய தொழில்நுட்பத்தின்படி, முன்பதிவு நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை வைத்து, காத்திருக்கும் நிலையில் உள்ள டிக்கெட் உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை இணையதளம் யூகித்து சொல்லி விடும். இந்த புதிய முறை, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி