எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது: முதல் நாளில் 17 ஆயிரம் பேர் வாங்கிச் சென்றனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2018

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது: முதல் நாளில் 17 ஆயிரம் பேர் வாங்கிச் சென்றனர்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது.எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்,
சென்னையில்உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நேற்று தொடங்கியது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த கல்லூரிகளின் டீன்கள் விண்ணப்ப விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, தபால் மூலமாகவோ செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பம் விநியோகம் குறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் ஜி.செல்வராஜன் கூறும்போது, “அரசு இடங்களுக்கு 45 ஆயிரம் விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. முதல்நாளில் அரசு இடங்களுக்கு 11,967 விண்ணப்பங்களும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 5,631 ஆயிரம் விண்ணப்பங்களும் விற்பனையாகியுள்ளன” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி