உயர்கல்வி நிறுவனங்களுக்கு 1000 கோடி மானியம் - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2018

உயர்கல்வி நிறுவனங்களுக்கு 1000 கோடி மானியம் - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!

ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்தும் வகையில், அக்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி மானியம் வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுமார் 800 பல்கலைக்கழகங்கள் உள்ளன. சர்வதேச தரவரிசை பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இந்நிலையில், ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

டெல்லி, மும்பையில் உள்ள ஐஐடி, பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி, மணிபால் அகடமி, ராஜஸ்தானில் உள்ள பிர்லா தொழில்நுட்ப அறிவியல் கழகம், உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு மானியமாக சுமார் ரூ.1000 கோடி வழங்குகிறது. வருகிற 5 ஆண்டுகளில் இந்த மானியத்தொகை வழங்கப்பட உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சர்வதேச தரம்மிக்க கல்வி நிறுவனங்களாக உயர்த்துவதற்காக இந்த நிதி வழங்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி