நூலகத்துக்காக 1 கோடி மதிப்பிலான வீட்டை தானமாக கொடுத்த ஆசிரியர் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2018

நூலகத்துக்காக 1 கோடி மதிப்பிலான வீட்டை தானமாக கொடுத்த ஆசிரியர் !

குடியாத்தம் பகுதியில் ஓய்வு பெற்றஆசிரியர் மகளிர் நூலகத்துக்கு தானமாக வழங்கிய வீட்டை வணிக வரித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சானூர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் புலவர் நடராஜன். இவர் வாழ்ந்த ஒரு கோடி மதிப்பிலான வீட்டை குடியாத்தம் பகுதியில் மகளிருக்கான நூலகம் அமைக்க தானமாக வழங்கியுள்ளார். இந்த நூலக கட்டிடத்தை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் வேலூர்மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.பின்னர் தான் வாழ்ந்த வீட்டை மகளிர் நூலகத்திர்க்கு தானமாக வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர் புலவர் நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.சி.வீரமணி, நூலகத்திர்க்காக தனது வீட்டை தானமாக வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர் புலவர் நடராஜனுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். மேலும் விரைவில் குடியாத்தத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

5 comments:

  1. வாழ்துக்கள் ஐயா. உலகம் உள்ளவரை ஆசிரியர் சமுதாயம் உங்களுக்கு நன்றிகடன் பட்டு இருக்கிறது.உங்கள் முலம் கர்மவீரர் காமராசரை பார்கிறோம்.நன்றி ஐயா .

    ReplyDelete
  2. வாழ்துக்கள் ஐயா. உலகம் உள்ளவரை ஆசிரியர் சமுதாயம் உங்களுக்கு நன்றிகடன் பட்டு இருக்கிறது.உங்கள் முலம் கர்மவீரர் காமராசரை பார்கிறோம்.நன்றி ஐயா .

    ReplyDelete
  3. இப்படி ஒரு பிறப்பு அரிது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி