கல்வித்துறையில் அதிகாரம் யாருக்கு தலைமை ஆசிரியர்கள் போர்க்கொடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2018

கல்வித்துறையில் அதிகாரம் யாருக்கு தலைமை ஆசிரியர்கள் போர்க்கொடி

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியதுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிப்பது, பணப்பலன் வழங்குவது, பணிப்பதிவேட்டை பராமரிப்பது போன்ற பணிகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்து வந்தனர்.

சமீபத்தில் கல்வித்துறையில் சீர்த்திருத்தம் செய்யப்பட்டதுஅதன்படி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டதுமேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையானது மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம்இதனால் 'இணையான பணி நிலையில் உள்ளோர் தங்களை கண்காணிக்க அதிகாரம் கிடையாது; பழைய நிலையே தொடர வேண்டுமென, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.தலைமை ஆசிரியர்கள் கூறியதாவதுசில இடங்களில் பொறுப்பு மாவட்டக் கல்வி அலுவலர்களாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்.

அவர்கள் எப்படி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிக்க முடியும்மேலும் பட்டதாரி ஆசிரியர் நிலையிலுள்ள வட்டார கல்வி அலுவலர்களை கண்காணிக்கும் அதிகாரம் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுஅவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள எங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பது நியாயமற்றது, என்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கல்வித்துறை பணியாளர்களின் பணி விதிகள் திருத்தி அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் குழப்பம் தீர்ந்துவிடும்,' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி