மாணவர்களுக்கு பல வண்ண சீருடை : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2018

மாணவர்களுக்கு பல வண்ண சீருடை : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

'அரசு பள்ளிகளில், பல வண்ண சீருடைகள் வழங்கப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை மாற்ற, அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி,
9, 10ம் வகுப்புகளுக்கு, ஒரு வகை நிறத்திலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வேறு வகையான நிறத்திலும், சீருடைகளின் நிறம் மற்றும் உடை வடிவங்கள் மாற்றப்பட்டு உள்ளன. அதேபோல், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், இந்த ஆண்டு, பச்சை நிறத்தில் சீருடைகள் மாற்றப்பட்டன.இந்நிலையில், மீண்டும் சீருடைகள் மாற்றப்படும் என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, 'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:தற்போதுள்ள சீருடை, ஒரே வண்ணத்தில்உள்ளதால், அவற்றுக்கும், தனியார் பள்ளி சீருடைக்கும் இடையே, பெரும் வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசம் தெரியாத வகையில், பல வண்ணங்களில் இருக்குமாறு, சீருடைகள் மாற்றப்படும். வரும் கல்வி ஆண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சீருடைகள் மாற்றப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி