CBSE - தனியார் பள்ளிகள் அங்கீகாரம்: தனி நீதிபதியின் தடை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2018

CBSE - தனியார் பள்ளிகள் அங்கீகாரம்: தனி நீதிபதியின் தடை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் இருந்து அங்கீகார சான்றிதழ் பெற வேண்டும் என்று தமிழக அரசு  கடந்த மார்ச் 2ம்தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் சார்பில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தார்.


இதையடுத்து, இந்த தடையை நீக்குமாறு தமிழக கல்வித்துறை செயலாளர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி பிடி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்யமுடியவில்லை என்றும், ஆவணங்களை கேட்டு பெற முடியவில்லை என்றும் அட்வகேட் ஜெனரல் விஜயநாராயண் வாதிட்டார். மேலும், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாநில அரசுகளிடம் அங்கீகாரம் பெறவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

சிபிஎஸ்இ பள்ளிகள் சார்பில் ஆஜரான வக்கீல் சதீஷ் பராசரன் வாதிடும்போது, ஏற்கனவே சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் தமிழக அரசின் கட்டண நிர்ணய குழு கட்டணம் நிர்ணயம் செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விரிவான வாதத்திற்காக விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி