SSA - திட்ட அலுவலகத்தை காலி செய்து 8 வழி பசுமைசாலை திட்டத்திற்காக கலெக்டர் ஆபீசில் தனி அலுவலகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2018

SSA - திட்ட அலுவலகத்தை காலி செய்து 8 வழி பசுமைசாலை திட்டத்திற்காக கலெக்டர் ஆபீசில் தனி அலுவலகம்

சேலம் - சென்னை 8வழி பசுமை விரைவுச்சாலை திட்டம் ரூ10ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படுகிறது.
இதற்காக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், மரங்கள் மற்றும் மலைகள், ஆறுகள் அழிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, இயற்கையை அழித்து  இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று விவசாயி்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் இதற்கான, நிலம் அளவிடும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சேலத்தில் 8வழி பசுமை விரைவுச்சாலை பணிகளை மேற்கொள்வதற்காக கலெக்டர் அலுவலகத்தில் தனி அலுவலகம் அமைக்கப்படுகிறது.

இதற்காக மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்திட்ட அறையை (எஸ்எஸ்ஏ) காலி செய்ய உத்தரவிட்டிருப்பது கல்வித்துறை பணியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கல்வித்துறை பணியாளர்கள் கூறியதாவது: சேலம் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கத்திட்ட அலுவலகம் என்று கல்வித்துறை சார்ந்த அனைத்து அலுவலகங்களும் இங்கு செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சிஓ அலுவலகத்தில் உள்ள எஸ்எஸ்ஏ அறை உள்ளி–்ட்ட சில அறைகளை 25ம்தேதி (இன்று) மாலைக்குள் காலி செய்ய வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாங்கள் கேட்டால், 8வழிசாலை பணிகளுக்கான தனிஅலுவலகம் இங்கு அமைக்கப்படுகிறது.

வெளியில் ரூ40ஆயிரம் வாடகை கொடுத்து, தனியார் கட்டிடத்தில் செயல்படமுடியாது என்பதால், எஸ்எஸ்ஏ அலுவலக இடத்தை தேர்வு செய்துள்ளதாக கூறுகின்றனர். 8வழி பசுமை சாலை என்பது ஒரு தற்காலிகமான திட்டம். இதற்காக மாணவர்களின் நலனுக்காக செயல்படும் கல்வி அலுவலகத்தை காலி செய்ய சொல்வது அபத்தமானது. இதனால் 276 அரசு பள்ளிகள் சார்ந்த பல்வேறு பணிகள் பாதிக்கப்படும். என்றனர்.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்டபோது, ‘’எஸ்எஸ்ஏ, மாவட்ட கல்வி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த அறையை 8வழிச்சாலை திட்ட பணிகளுக்கான அலுவலகமாக பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆட்சேபம் இருப்பவர்கள் என்னிடமோ, கலெக்டரிடமோ முறையிடலாம். தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி