TET - தகுதித்தேர்வில் விலக்கு கிடைக்குமா ? காத்திருக்கும் 5,500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2018

TET - தகுதித்தேர்வில் விலக்கு கிடைக்குமா ? காத்திருக்கும் 5,500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும் 5,500 பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் நிரந்தர பணி இல்லாத பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 5,500பேர் உள்ளனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரிய உத்தரவின்படி, பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.ஆனால், மாநிலங்கள் தமது கொள்கைக்கு ஏற்றபடி குறிப்பிட்ட நாட்களை தேர்வு செய்து, அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அதன்படி கேரள அரசு, 2012 மார்ச் 31க்கு முன் பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கர்நாடகா 2012 ஜூலை 28-வரை விலக்கு அளித்துள்ளது.அதுபோல் தமிழகத்தில் முன் தேதியிட்டு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன், துறை செயலாளரிடம் 5,500 ஆசிரியர்கள் மனு அளித்தனர்.

சென்னையில் நடந்த ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இதனை வலியுறுத்தினர்.ஆனால்இதுவரை அதற்கான உத்தரவு வராததால் 5,500 ஆசிரியர்கள்புலம்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி