வரும் 13ல் பிளஸ் 1 துணை தேர்வு 'ரிசல்ட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2018

வரும் 13ல் பிளஸ் 1 துணை தேர்வு 'ரிசல்ட்'

பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு முடிவுகள் வரும், 13ல் வெளியிடப்படுகின்றன.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 1 வகுப்புக்கு, ஜூனில் நடந்த சிறப்பு துணை தேர்வு முடிவுகள், வரும், 13ல் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற, 16 மற்றும் 17ம் தேதிகளில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் நகலுக்கு, மொழிபாடங்களுக்கு, தலா, 550 ரூபாய்; ஒவ்வொரு பாடத்திற்கும், 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.மறுகூட்டலுக்கு, மொழி பாடங்களுக்கு தலா, 305 ரூபாயும், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி