பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு விடைத்தாள்நகல்: இன்று பதிவிறக்கம் செய்யலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2018

பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு விடைத்தாள்நகல்: இன்று பதிவிறக்கம் செய்யலாம்


தமிழகத்தில் கடந்த ஜூன்,  ஜூலை மாதங்களில் பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வெழுதி விடைத் தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண்,  பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து,  இரு நகல்கள் எடுத்து செப்.3-ஆம் தேதி முதல் செப்.4 வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.  மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

மறு மதிப்பீடு:  ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.505,  இரு தாள் கொண்ட பாடம்- ரூ.1,010 (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்)மறுகூட்டல்:  ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.205,  இரு தாள் கொண்ட பாடம் ரூ.305 (மொழிப்பாடம்,  ஆங்கிலம் மற்றும் உயிரியல்).  இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் இயக்குநர்தண்.வசுந்தராதேவி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி