Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தொலைநிலை படிப்புகளை நடத்த 2 பல்கலைக்கு மட்டும் அங்கீகாரம்

தமிழகத்தில், சென்னை மற்றும் அண்ணா பல்கலைகள் மட்டும், தொலைநிலை கல்வியில், படிப்புகளை நடத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதேநேரத்தில், சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புக்கு அனுமதி தரப்படவில்லை.தொலைநிலை கல்வியில் பல்வேறு மாற்றங்களை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்கலை கழக மானிய குழுவான,யு.ஜி.சி., அமல்படுத்தி வருகிறது.பரிசீலனைஇதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் தொலை நிலை கல்விக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பல்கலைகளின் பட்டியலை, யு.ஜி.சி., வெளியிட்டு உள்ளது. இதன்படி, சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலைக்கு மட்டும், அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் அங்கீகார விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. அனைத்து பல்கலைகளுக்கும், சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு அனுமதி வழங்கப் படவில்லை.அதேபோல, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,- பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு, தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே, அனுமதி தரப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலையை பொறுத்த வரை, பி.ஏ., - எம்.ஏ., பொது நிர்வாகம், எம்.ஏ., அரசியல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு மட்டும், அங்கீகாரம்அளிக்கப்பட்டுள்ளது.அதிர்ச்சிஅண்ணாமலை பல்கலை, அழகப்பா, பாரதியார், மதுரை காமராஜர், பெரியார், திருவள்ளுவர், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார் உட்பட, 10 பல்கலைகளின் பெயர்கள், அங்கீகார பட்டியலில் இல்லை. இதனால், பல்கலை நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

4 comments

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives