அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: யுஜிசி கல்வித் தகுதி உடையவர்களை கணக்கெடுக்க உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2018

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: யுஜிசி கல்வித் தகுதி உடையவர்களை கணக்கெடுக்க உத்தரவு!

அரசு கலை அறிவியல் கல்லூரி களில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந் தரம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.

யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி உடைய கவுரவ விரிவுரை யாளர்களின் விவரங்களை கணக்கெடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந் தரம் செய்யப்படுவர் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன் பழகன் கடந்த 30-ம் தேதி சட்டப் பேரவையில் அறிவித்தார்.

 இந்த நிலையில், கவுரவ விரிவுரை யாளர்களை பணிநிரந்தரம் செய் வதற்கான ஆயத்தப்பணிகளை கல்லூரி கல்வி இயக்ககம் தொடங்கியுள்ளது.தகுதியுடைய பேராசிரியர்கள்யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி உடைய கவுரவ விரிவுரையாளர் விவரங்களை கணக்கெடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியை ஆர்.சாருமதி அனைத்து அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அரசு கலை அறிவியல் கல் லூரிகள் மற்று்ம் கல்வியி யல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களில் தற்போதைய யுஜிசி விதிமுறை களின்படி உதவி பேராசிரியர் நியமனத்துக்குரிய கல்வித்தகுதி யுடன் பணிபுரிவோரின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பான விவரங்களையும், தங்கள் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பணியாளர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்களின் இடமாறு தல் போன்ற காரணங் களினால் பணிவாய்ப்பை இழந்த கவுரவ விரிவுரையாளர்களின் விவரங் களையும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

25 comments:

  1. RTI தகவல் அடிப்படையில் விவரங்களை கல்லூரி கல்வி இயக்குனரகம் சேகரிக்கிறது அதனடிப்படையில் சிறப்பு தேர்வா?அல்லது experience அடிப்படையில் தேர்வு செய்வதா என அரசு முடிவு செய்யும்.

    ReplyDelete
  2. அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரிகளை M.phil ,P.hd முடித்து NET , SET, SLET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு TRB போட்டி தேர்வு மூலம் நியமித்தால் தரம் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
  3. Trb.compatitive exam by written is the only solution for picking suitable lecturers in govt colleges

    ReplyDelete
  4. I kindly request our state government to conduct open and common teachers recruitment board for asst prof in govt colleges.there no of qualified are working for long time.in private colleges.More than guest lecturers, Assistant professor who are working in private
    colleges have more work burden and stress. So consider the staff working in private college without biase.They are also human like anyone.

    ReplyDelete
  5. otherwise school teachers come to post

    ReplyDelete
  6. For guest lecturers experience others Trb exam

    ReplyDelete
  7. Nowadays exam fraud changing marks

    ReplyDelete
  8. For eligible candidates no need exam

    ReplyDelete
  9. For private institution also Trb is going to call for

    ReplyDelete
  10. Experience அல்லது exam விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உண்டு

    ReplyDelete
  11. Amount ready Panna arambichuttanga

    ReplyDelete
  12. Please conduct open and common trb for assistant professor in government colleges.pleasetry to consider both guest lecturers and private colleges assistant professor working more than ten years with qualifications prescribed by UGC 2018 I kindly request higher education government of Tamil Nadu.

    ReplyDelete
  13. This is wrong desition of our government. We are in need of common trb to all.How to observe guest lecture to govt colleges . Is it right way? Govt cheet all private staff members. Private rivate colleges comming under govt Universities. So pl file the case against this guest lecture posting with the help of private college associations

    ReplyDelete
    Replies
    1. No one interfere in govt policies. Its my experience. Already i received a rti reply regarding engg college trb exam and arts& science college interview based recruitment. I ask the contrary recruitment process. Govt replied that its govt policy.

      Delete
  14. Trb planner was published in the year of 2017. There is no notification about asst prof for arts colleges so for.

    ReplyDelete
    Replies
    1. Polytechnic,tet mathri ithulaium correption nadanthirukum athan intha iluthadipu..iluthadichalea oolal nadanthirukunu therinchukanga friends..mutalga votu potu intha govt a konduvanthanga..athukana kastatha naama ippa anupavaikrom..

      Delete
  15. Sir kindly consider aided college self finance staff

    ReplyDelete
  16. God is the who give the job it is not money orqualification

    ReplyDelete
  17. You pray to God God will give job

    ReplyDelete
  18. கல்லூரியில் பணிபுரிந்ததை எப்படி தகுதியாக நிர்ணயிக்க முடியும், எப்படி பள்ளிகளுக்கு தேர்வு வைத்து ஆசிரியர்களை நியமிக்கிறார்களோ அது போன்றே பேராசிரியர்களுக்கு PHD/NET/SET தகுதி உடைய மாணவர்களை போட்டி தேர்வு வைத்து எடுக்க வேண்டும், நாட்டில் உள்ள அனைத்து வேலைகளும் அப்படி தான் நிரப்பப்படுகின்றன, AP வேலைக்கு மட்டும் ஏன் இப்படி பாகுபாடு, நோகாமல் செய்யும் வேலைக்காகவா?

    ReplyDelete
    Replies
    1. Kandipa aided sf clg asst professors court la case poduvanga..so atha vachea tet mathri clg trb a inum 3 years iluthadika plan..

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி