பள்ளி இடை நின்றவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர அரசு முயற்சி: மனிதவளத்துறை அமைச்சர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2018

பள்ளி இடை நின்றவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர அரசு முயற்சி: மனிதவளத்துறை அமைச்சர் தகவல்

வறுமை காரணமாக ஏதேனும் பணிக்குச் செல்ல நிர்பந்திக் கப்படும் பள்ளி இடை நின்ற மாணவர்கள் மீண்டும் தங்கள்கல்வியைத் தொடர அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.
மும்பையில் சனிக்கிழமை விவேகானந்தா கல்விச் சங்கம் சார்பாக நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர்ஸ்மிரிதி இரானி பேசியதாவது:"எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள‌ ஒரு மாணவர் வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் பணிக்குச் செல்ல நிர்பந்திக்கப்படலாம். அப்படியான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தங்கள் கல்வியை மீண்டும் தொடர்வதற்கு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.இதன் மூலம் ஒரு மாணவர் முனைவர் பட்டம் வரைக்கும் படிக்க வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதுதொடர்பான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.மேலும், பள்ளி மாணவர் களுக்காக 'இஷான் விகாஸ்' என்று ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

 இதில்9 மற்றும் 11ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் பின்னாளில் ஆய்வாளர்களாகவோ, விஞ்ஞானி களாகவோ ஆவதற்குஆர்வம் காட்டும் சிலரைத் தேர்வு செய்து அவர்களை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற நாட்டில் உள்ள உயர்ந்த கல்வி நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.ஆண்டுக்கு இரண்டு முறை நிகழும் இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு முறையும் சுமார் 2200 மாணவர்கள் கலந்து கொள்வார்கள்.

கல்வி என்று வரும்போது பெண்கள், பழங்குடிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் உள்ளிட்டவர்களால் உயர் கல்வியை அடைய முடிவதில்லை. இதற்குப் பொருளாதார வசதியின்மையே காரணம்.என்னிடம் பணமில்லை என்பதால் தான் நான் என்னுடைய கல்வியை இடையில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது".இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. Srimathi smrithi Iraniji is not a Mhrd minister now. Be update in education sites. Any way nice idea. How to contact them in case we come across child workers?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி