தாஜ்மஹால் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2018

தாஜ்மஹால் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டது!


ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் நினைவு சின்னத்தை பார்ப்பதற்காக தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்தியாவின் பெருமைக்குரிய சின்னமான தாஜ்மஹால் சுற்றுச்சூழல் மாசுவால் அதன் பொழிவை இழந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தாஜ்மஹாலை பராமரிக்க முடியாமல் மத்திய அரசும் திணறி வருகிறது. இந்நிலையில் தாஜ்மஹால் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் ஆய்வு துறை அறிவித்துள்ளது. புதிய கட்டணத்தின்படி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தலா ரூ.1,100 நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும். உள்ளூர் சுற்றுலா பயணிகள் ரூ.40 கட்டணாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு ஆக்ரா சுற்றுலா நல சங்க தலைவர் பிரகலாத் அகர்வால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்டணத்தை மட்டும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்லும் தொல்லியல் துறை, நினைவுச் சின்னங்களை பராமரிப்பதில் கவனம் செலுத்துவிதில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். தாஜ்மஹால் சுற்றுச்சூழல் மாசுவால் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின் போது, தாஜ்மஹால் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் இடித்து விடுங்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி