Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சிறப்பு ஆசிரியர்க்கான சான்றிதழே இல்லாமல்அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ..கண்டு கொள்ளுமா ? கல்வித்துறை!!!


தமிழக அரசால் அரசுப் பள்ளிகளில்  சிறப்பு பாடங்களைகற்பிக்க (ஓவியம் தையல் இசை உடற்கல்வி) 2012 மார்ச் மாதம் பகுதி நேர ஆசிரியர்களாக சுமார் 16549 பேர் நியமிக்கப்பட்டனர்  .இவர்களுக்கு ஆரம்பத்தில் தொகுப்பூதியமாக  ரூ.5000 சம்பளம் வழங்கப்பட்டது பின்னர் 2014ல் ரூ.2000 உயர்த்தி ரூ.7000 வழங்கப்பட்டது .

அதன் பின்னர் ஆகஸ்ட் 2017 முதல் தற்போது உள்ள கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு .செங்கோட்டையன் அவர்களால் ரூ.700 உயர்த்தி  தற்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக  ரூ.7700 வழங்கப்பட்டு வருகிறது.  தற்பொழுது வரை 7ஆண்டுகள் முடிவடைந்த நிலையில்   பகுதிநேர ஓவிய ஆசிரியர்களாக  பணியாற்றும் பல பேரிடம் சிறப்பு   ஆசிரியர்களுக்கான சான்றிதழே இல்லை என தெரிய வருகிறது...  அதாவது  ஒருவர் ஓவிய ஆசிரியராக பணியாற்ற வேண்டுமானால் freehand outline and model drawing  (higher grade) முடித்து அதில் தேர்ச்சி பெற்று பின்னர் இவர்கள் தமிழக அரசால் நடத்தும் 3 மாத காலப் பயிற்சியான Technical teacher certificate course (TTC - தொழில் நுட்ப ஆசிரியர்க்கான சான்றிதழ்)  முடித்து இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே  எந்த ஒரு பள்ளிகளிலும் ஓவிய ஆசிரியராக பணியாற்ற முடியும்...

 ஆனால் பல ஓவிய ஆசிரியர்கள் higher grade மட்டுமே முடித்து விட்டு அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக இன்று வரை   பணியாற்றுவது அரசுக்கு தெரிந்தும்... கல்வித்துறை  கண்டு கொள்ளாமல் இருப்பது  முறையாக கல்வித்தகுதி வைத்திருப்பவர்களிடம் மனச்சங்கடத்தையும்  பெரிதும் பின்தங்கிய நிலைக்கும் அவர்கள்  தள்ளப்பட்டுள்ளனர் ...    நடந்து முடிந்த  சிறப்பாசிரியர் தகுதித்தேர்விலும்  பலர்க்கு  போதுமான கல்விசான்று  இல்லாமலே  தகுதித் தேர்வு எழுதி  தேர்ச்சி பெற்று அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்  என்பதும்அரசுக்கு நன்றாக தெரியும்...  ஆனால் அவர்களுக்கு  அரசு  அரசுப் பணி வழங்கப் போவதில்லை. அதேபோல் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தகுதியற்ற   பகுதி நேர ஓவிய ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் ... என  Trb யையும்  கல்வித் துறையையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்!

இவண்
-  குருசாமி பகுதிநேர ஓவிய ஆசிரியர் மதுரை

28 comments

 1. அது மட்டுமல்ல உடற் கல்வி ஆசிரியர் பட்டம் பெற்று 18 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு முன்னுரிமை தரவில்லை.இப்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 10 வருடம் காத்திருப்பவர்க்கும் 18 வருடமாக காத்திருப்பவர்க்கும் ஒரே மதிப்பெண். இப்படி இருக்கும் நிலையில் எங்களுக்கு எப்போது வேலை கிடைக்கும்.அரசும் கண்டு கொள்ளவில்லை.

  ReplyDelete
 2. Apdipoduda aruvale
  Very Good. Eppothan soodupidithu erukku.

  ReplyDelete
 3. வயதானவர்களுக்கு முதலில் வேலையைப் போட்டுக் குடுங்க.நாங்க சீக்கிரம் செத்துப்போவோம். அப்பறம் மத்தவங்களுக்கு கொடுங்கள்‌. Sir IT field லே தான் freshers தேவை. Teaching field லே அல்ல. Teaching field லே experienced person தான் தேவை. இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சின்ன பசங்கலோட பெரியவர்களை exam எழதச்சொல்லக் கூடாதுனு தெளிய வேண்டாமா? மணபாடம் பண்ணி ஒப்பிக்கிறது ஒரு teacher க்கு நல்லதா? அதைதான் இந்த rxam லே பண்ணி இருக்காங்க. ஆசிரியருக்கு படைக்க தெறிய வேண்டுமே தவிர memorize பண்ணி
  ஒப்பித்தே அல்ல. யாராவது இதை எடுத்துச் சொல்லுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. Vayadhanavargalukku edhukku velai..veetukkulle rest Podungal.. Youngsters kkku chance kodungal...

   Delete
 4. Teacher training முடிக்காதவங்க படிக்க போங்கப்பா.நீஙகளே சொல்லிட்டு படிச்சிட்டு வாங்க. நாங்க உங்களால் அசிஙகப்படுகிறோம். Special Teachers னா ஒரு கெத்து வேணாமா? மத்தவங்களாலே நம்ம subject handle Panna mudiyuma ? But நம்மலாலே அவர்களுடைய subject டை handle பண்ண முடியும்.நம் subject special subject மறக்காதிங்க. In many schools our teachers I mean special Teachers are behaving like slaves.very bad இப்படி நடந்துக்கொள்ளலாமா? நாம் அனைவரையும் போல +2 then degree then teacher training முடித்துவிட்டு தானே வந்தோம். அதன் பின் exam வைத்து தானே எடுத்தாங்க. ஏன் நிரந்தரம் பண்ணமாட்டேன் என்கிறார்கள். ஒன்னுமே புரியலப்பா சாமிங்களா. 7வருடம் வேலை செய்த experience வேர.

  ReplyDelete
  Replies
  1. மாற்றுத் திறன் மாணவர்களை பயிற்றுவிப்பதற்கு சிறப்புக் கல்வி பெற்றவர்களே சிறப்பாசிரியர் (special teacher) என்றழைக்கப்படும். நீங்கள் கலை ஆசிரியர்கள் என்பதே சரி. நன்றி

   Delete
 5. Poi Case poduga udanea govt ungaluku velai kuduthuruvanga.2012 iruthu ithaitha seiriga niyum valakudathu aduthavanaiyum valvidakudathu.

  ReplyDelete
 6. Part time teachers 2012 podupothu employement ordera poi iruthikana poduvanga.niraiya peru amt kuduthu vankiniga.aparam eppadi sir poduvanga

  ReplyDelete
 7. Employment orderoda than ponom ungalukku nallavangale theriyathu Pola. Ella Golmaal parties than therinthu vachu erukkinga. Very sad.

  ReplyDelete
 8. நீங்களும் 7 வருடம் வேலை செய்துவிட்டு அப்ரம் வாங்க அப்போதான் நாங்க படுகிற கஷ்டம் உங்களுக்கு தெறியும். நீங்க எல்லோரும் சேர்ந்துதான் எங்க வாழ்க்கையை கெடுக்குறீங்க. எங்களுக்காக நீங்க தான் பேசனும். சொல்லனும் sir எங்க part time கலை ஆசிரியர்கள் பாவம் sir இன்னும் எவ்வளவு நாள் கஷ்டபடுவாங்க அவங்களுக்கு முதலில் பணியை நிரந்தரம் பண்ணுங்க அப்பரம் நாங்க வாரோம் இப்படி செய்திருந்தா உங்களை அனைவரும் பாராட்டி இருப்பாங்க. ஆசிரியர்கள் னா இப்படிதான் இருக்ககனம்னு மற்ற துறை ஆசிரியர்களும் புரிந்துக் கொள்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. Private company le velai senju parunga..neenga ellam one month kooda nikka mudiyadhu...edho govt part time velaiyavadhu kedachudhennu happy aa irunga...idhaiyum pudingittu utruvanga....

   Delete
 9. யாரப்பா நீ. நாங்க நல்ல வேலைய பாரர்த்தவங்க தான் MNC லே வேலை பார்த்து விட்டு பின்ன private jobs எல்லாம் செய்துவிட்டு இதைவிட நல்ல சம்பளம் வாங்கிட்டு இருநதவங்க தான் நாங்க. சம்பந்தமில்லாத வேலையையே அவ்வளவு நல்ல செய்த நாங்கள் படித்த பிடித்த வேலையை எப்படி கிடைக்கும்போது விட்டுட்டு govt job ஆச்சே சேர்ந்துவிடலாம்னு சேர்ந்துட்டோம். இப்போ அதிகப்பிரங்கிதனமான பேச்சி எதுக்கு எங்க வயசே போகுதுனு நாங்க வெந்துபோரோம். வயித்தெருச்சல கொட்டுறீங்கலே. போங்க எங்காவது Matriculation school லே வேலைக்கு சேர்ந்து பின்பு நாங்க செய்த மாதிரி ஒரு 7 வருடம் govt வேலை அநுபவம் பெற்று கேள்வியை எழுப்புங்கள். அசிங்கமா பேசக்கூடாது.

  ReplyDelete
 10. குருசாமி சார் வந்தீங்க சொன்னது சரியாக்கூட இருக்கலாம் ஆனால் நல்ல qualification உள்ள ஆட்க்களும் இருக்காங்களே அதைபும் நீங்க mention பண்ணி இருந்திருக்கனும். Anyways I am also a part time special teacher. MA.MPhil (PhD)மேல படிக்க இந்த சம்பளம் போதாது. Teacher எப்பவும் student இருக்கும்ங்க.

  ReplyDelete
 11. மேதாவித்தனமா பன்னியிருக்காங்க

  ReplyDelete
 12. இதுக்கு ஒரேவழி நீதிமன்றம் தலையிட்டுதான் தீர்கனும்
  ஏனா சான்றிதழ் இல்லாதவர்களை எப்படி பணிசெய்ய அனுமதிக்கலாம்

  ReplyDelete
 13. ஒருதலைப்பைகொடுத்து அதில் சிறந்தபடைப்புகளுக்கு மதிப்பெண் வழங்கி தேர்வுசெய்திருக்கவேண்டும் பானை வரையதெரியாதவர்களை நான் சிறப்பாசிரியர் TTC பயிற்சியில் பார்த்தேன் அவர்கள்தான் இந்ததேர்வில் உள்ளே சென்றிருப்பார்கள் என்பது என் ஐயப்பாடு

  ReplyDelete
 14. Sir நான் ஒரு இசை ஆசிரியர். பாட்டு ஆசிரியரை பாட வைக்காமலே எப்படி select பண்ணுவாங்க. நான் Diploma படிக்கும்போது class first வருவேன். College போட்டியே first அதன் பின் degree first class. Teacher training லேயும் first class 4th rank 150 பேர்லே. அது மட்டும் இல்லாமல் PG MPhil (Socio) பண்ணியிருக்கிறேன். ஏன் TTC லே first வந்தவளுக்கே cv list le name இல்லை. என்னதான் பண்றதுனு புரியலே. ஏற்கனவே exam வச்சிதான் உள்ளே வந்தோம் அப்போ இந்த மாதிரி இல்லையே. Practical வைத்து தானே எடுத்தாங்க. நீங்களே யோசித்துப் பாருங்கள். கலை ஆசிரியர்களை கலையே சோதிக்காமலேயே தேர்ந்து எடுப்பார்களா? நீதிமன்றம் போனால் அசிங்கமாக கேட்க்கப் போராங்க.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே... கலை ஆசிரியர்கள் என்று குறிப்பிட்தற்கு.

   Delete
 15. கடைசியாக சொல்கிறேன் நல்ல தகுதியுடைய ஆசிரியர்களை மனசாட்சியோட select பண்ணி போடுங்க அப்போதான் நல்ல students டை உருவாக்க முடியும். இல்லையெனில் மக்கு திருடு humanity இல்லாத genaration தான் உருவாகும். கல்வி கற்றுக்கொடுக்கும் விஷயத்தில் தயவு செய்து விளையாட வேண்டாம்.

  ReplyDelete
 16. இவர்களெல்லாம் ஓவிய ஆசிரியர் என்னகொடுமை. நானும் பகுதிநேரம்தான் இதுவரை மாதத்தில் ஒருநாளைக்கூட தவிர்ததில்லை 12 நாட்களையும் நிறைவுசெய்துள்ளேன் மாவட்ட அளவில் பரிசுகளை பெற்று திறமையான மாணவர்களை உருவாக்கி இருக்கிறேன் ஆனால் தகுதியே இல்லாதவர் தேர்வில் நம்பமுடியாத மதிப்பெண் இது ஆதங்கமல்ல எத்தனையோ தகுதிவாய்ந்தவர் புறக்கனிக்கப்படுகின்றனர்

  ReplyDelete
 17. நான் சொல்வதில் குறையென நினைத்தால் தேர்வானவர்களை ஒரே நேரத்தில் ஊடகங்களின் முன்னால் வரையச்சொல்லட்டும் சிறப்பான ஆசிரியர் யார் சிரிப்பாசிரியர் யாரெனத்தெரியும்

  ReplyDelete
 18. தகுதிவாய்ந்த வல்லுனர்களைக்கொண்டு தேர்வுமுறையை கையாண்டால் தகுதியானவர் ஆசிரியராக கிடைப்பர் இந்த செயல் நடப்பதரிதே. மருத்துவர் ராமதாஸ் இந்ததேர்வுமுறை தவரென சுட்டிக்காட்டினார் வரையதெரிகிறதா என பார்கவேண்டுமே தவிர எழுத்துதேர்வு எதர்கென கேள்வியெழுப்பினார்

  ReplyDelete
 19. தகுதியானவர்களை தேர்வுசெய்திருந்தால் உண்மையில் நானும் தலைவணங்குகிறேன்

  ReplyDelete
 20. Arulnathan அவர்களே நாங்களும் சிறப்பாசிரியர்கள் தான். Because we have unnic talent. Ellarum கலை ஆசிரியர்கள் ஆக முடியாது. Do you understand? நாங்கள் மற்ற ஆசிரியர்கள் போல B.A, B.Sc,B.Com,Computer Science இன்னும் Master degree எல்லாம் படித்து அதன் பின் இந்த Art கற்றுக்கொண்டு வந்துள்ளோம்.ஒரு சிலர் Minimum +2 வரை அனைவரையும் போல படித்து அதன் பின் கலைதுறையை special லாக எடுத்து படித்து வந்து இருக்கிறார்கள். So please விவரம் தெரியாமல் தயவு செய்து பேசித்திரியாதிங்க. நீங்க எங்களைச் போன்ற ஆசிரியர்களைப் பார்க்கவில்லைப்போலும். We are really special and don't jealus on us. I knew people like you. So before trying to insult other'see yourself.

  ReplyDelete
 21. நண்பர்களே பல லட்சம் பேர் எழுதிய tnpsc group iv exam result 3 மாதத்தில் வெளியானது ஆனால் வெரும் 35 ஆயிரம் பேர் எழுதிய trp special teachers exam result வெளி வர 10 மாதங்களாம் என்ன நடந்திருக்கும் குற்றம் நடந்து என்ன

  ReplyDelete
 22. தகுதியான சான்றிதழ் இல்லையென்றால் வேலை கிடைக்காது.என்று கூறும் அரசும்,கல்வித்துறையும் சான்றிதழே இல்லாத நபர்களை என்ன செய்ய போகிறது. ஆசிரியர் பயிற்சியே பெறாத நபர் எப்படி சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.இதனால்தான் மாணவர்கள் மனநிலை மாற காரணம். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கலையை கற்று கொடுக்க காரணம் மாணவர்களின் மனதை மென்மையாக்

  ReplyDelete
 23. மென்மையாக்கவும் திறமையை வளர்த்துக் கொள்ளவும். தயவுசெய்து கல்வி துறை விரைவில் முயற்சி மேற்க்கொள்ள வேண்டுகிறேன்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives