Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதிய பாடத்திட்டம் - உரிய பயிற்சியின்றி தேர்வா? ஆசிரியர்கள் குற்றச்சாட்டு!


பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றது முதல், அத்துறையைமேம்படுத்தும் வகையில், பொதுத் தேர்வுகள், முடிவுகள்தேதியை முன்கூட்டியே அறிவிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

 புதிய பாடத் திட்டம், 12 ஆண்டுக்கு பின் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1க்கு அறிமுகம் செய்து, மாணவர்களுக்கு, ஜூனில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில்,’கியூ.ஆர்., கோடு’ உட்பட சிறப்பு அம்சங்கள் பாடங்களில்புகுத்தப்பட்டன. இதுபோன்ற நவீன முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு, ஜூலை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், பிளஸ் 1 வணிக கணிதம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட சில பாடங்களுக்கு, இன்னும் பயிற்சி அளிக்கப்படவில்லை. மே மாதம் பயிற்சி துவங்கியிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். காலாண்டு தேர்வை மாணவர்கள் சந்திக்க உள்ள நிலையில் மாதிரி வினா விடை கூட வழங்கப்படவில்லை.

ஆசிரியர்கள் கூறுகையில், ’ஜூனில் பாடப் புத்தகம் வழங்கப்பட்டது. அன்று முதல் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஒருமாதம் சென்ற பின், எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்ற பயிற்சியை துவங்கினர். ’பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட சில பாடங்களுக்கு பயிற்சி அளிக்கும் செயல் திட்டம் இல்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது’ என்கின்றனர்

4 comments

 1. ஏன்டா எல்லாமே உங்களுக்கு குத்தம் தானாட, எல்லாம் pg முடிச்சவங்க தான,

  ReplyDelete
 2. நீண்ட நாள் கழித்து கல்விச்செய்தி வலைதளத்தில எனது கருத்தை பதிவிடுகிறேன்...
  இப்பொழுதும் விழித்துக் கொண்டால் அனைத்து தேர்வர்களும் பிழைத்துக் கொள்ளலாம்...
  இல்லையேல் நமக்குள்ளே சண்டை போட்டு மண்னோடு மண்ணாக போவது என்னவோ நாம் தான்...
  எவ்வளவு பணியிடம் இருக்கிறதோ அதை ஓரளவு யாரும் பாதிக்காதவாறு 2012 2013 2014 2017 என அனைத்து பிரதிநிதிகளும் இணைந்து அரசிடமும் அமைச்சரிடமும் ஒரு வழிமுறை சொல்லலாம்...
  இல்லை எனக்கென்ன எவன் குடி கெட்டால் எனக்கென்ன இருந்தால் நாம் அனைவரும் கண்ணீர் தான் தினமும் வடிப்போம்...
  விரைந்து முடிவெடுங்கள் .... அனைவரும் இணைந்து போராடுவோம்... நம்முடைய நியாயமான கோரிக்கையை வென்றெடுப்போம்...
  நண்பரின் மரணம் மூலம் நமக்கு படிப்பினையை உருவாக்குவோம்...

  அனைவரும் இணைந்து ஓர் நல்ல முடிவு எடுங்கள் நானும் உங்களோடு கைகோர்க்கிறேன்...

  தோழர் ஜெயப்பிரகாஷ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்


  ReplyDelete
 3. பயிற்சி தந்தால் தான் பாடம் நடத்தமுடியுமா தனியார் பள்ளிகள் பயிற்சி இல்லாமல் பாடம் நடத்தும் போது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் பயிற்சி சோப்பேறிகளா புத்தகத்தை நன்றாக படித்து பாடம் நடத்துங்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives