KERALA FLOOD RELIFE MATERIALS - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2018

KERALA FLOOD RELIFE MATERIALS



தேனிமாவட்ட ஆசிரியர்கள், நண்பர்கள் நாகலாபுரம் BVM பள்ளி மாணவர்கள்,  ஆசிரியர்கள், நிர்வாகம் ஆகியோர் வழங்கிய நிவாரண பொருட்களை கேரளா மாநிலத்தில்  வெள்ளத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வீடுகளையும், உடைமைகளையும் முற்றிலும் இழந்து  உணவு கூட இல்லாத  நிலையில் இருந்த மாங்குளம் கிராமத்தில் சர்ச்சில் தங்கவைக்கப்பட்டுள்ள 200 மலைவாழ் மக்களுக்கு எங்கள் குழுவில் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பொருட்களை சுமந்து நடந்து சென்று நேரில் வழங்கப்பட்டது.. உணவு பொட்டலங்களைப் கொடுத்துபோது அவர்களின் முகமலர்ச்சியைக்கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம், இதுவரை அந்த கிராமத்திற்கு நிவாரணப்போருட்கள் யாருமே கொண்டு செல்லவில்லை என்ற கூறியபோது எங்கள் மனம் வலித்தது.... கொண்டு சென்ற பொருட்களை அனைவருக்கும் கொடுத்த பின்பு மலைவாழ் மக்கள் மனநிறைவோடு போதும்   மீதியுள்ள பொருட்களை எங்களைப் போல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுங்கள் என்று மலையாளத்தில் கூறிய போது எங்கள் மனது  வலித்தது,.. நீங்கள் வழங்கிய சிறு பொருளும் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு  சேர்கப்பட்டது என்பதை உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும், உதவிய முகம் தெரியாத நண்பர்களுக்கும், பல கோடி நன்றிகளுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..  3 லட்சம் மதிப்பிலாண பொருட்கள் முழுவதும் Whatsapp  குழுவின் மூலமாகவே சேகரிக்கப்பட்டது..   எங்கள் பதிவிற்கு கருணை உள்ளத்தோடு பொருளாகவோ, பணமாகவோ உதவிய ஆசியர்கள், நண்பர்கள், *BVM பள்ளி மாணவர்களுக்கும், நிர்வாகத்திற்கும்* , ஆசிரியர்களுக்கும்,மற்றும் ரூபாய் 30000 ( முப்பதாயிரம்)  மதிப்பலான நிவாரணப்பொருட்கள் வழங்கிய இராசிங்காபுரம் திரு. *வனராஜ்* ( Cardamom Planters)   & சிலமலை AIR DYER நிர்வாக இயக்குநர் திரு. *இரமேஷ்* அவர்களுக்கும், எங்களுக்கு ஊக்கமும்,ஆக்கமும் கொடுத்த வழியனுப்பிய மதிப்பு மிகு தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் நன்றிகள் பல கோடிகள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி