Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

உலக வரலாற்றில் இன்று ( 09.09.2018 )செப்டம்பர் 9 (September 9) கிரிகோரியன் ஆண்டின் 252 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 253 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 113 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1493 – ஒட்டோமான் பேரரசின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரொவேசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.
1513 -ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் ஸ்கொட்லாந்தின் நான்காம் ஜேம்ஸ் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.
1543 – மேரி ஸ்டுவேர்ட் 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது ஸ்கொட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.
1791 – அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் நினைவாக ஐக்கிய அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன், டி.சி. எனப் பெயரிடப்பட்டது.
1799 – பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
1839 – அலபாமாவில் இடம்பெற்ற பெரும் தீயில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து சேதமடைந்தன.
1839 – ஜோன் ஹேர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்.
1850 – கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
1922 – கிரேக்க-துருக்கி போர் துருக்கியரின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.
1924 – ஹவாய், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் குரோவ் நகர் மீது நாசி ஜெர்மனியர் குண்டுகளை வீசித் தாக்கினர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய விமானம் ஒரிகனில் குண்டு வீசியது.
1944 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சோவியத் சார்பு அரசு பதவியேற்றது.
1945 – இரண்டாவது சீன-ஜப்பான் போரில் ஜப்பான் சீனாவிடம் சரணடைந்தது.
1954 – அல்ஜீரியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1500 பேர் கொல்லப்பட்டனர்.
1965 – சூறாவளி பெட்சி நியூ ஓர்லியன்சில் இரண்டாவது தடவை தரைதட்டியதில் ஏற்படுத்தியதில் 76 பேர் கொல்லப்பட்டனர். $1.42 பில்லியன் சேதமடைந்தது.
1970 – பிரித்தானிய விமானம் பாலஸ்தீனத் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டு ஜோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
1990 – சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது.
1993 – பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தது.
2001 – ஆப்கானிஸ்தானில் தேசிய முன்னணித் தலைவர் அகமது ஷா மசூட் கொலை செய்யப்பட்டார்.
2004 – இந்தோனீசியா, ஜகார்த்தாவில் அவுஸ்திரேலிய தூதரகத்துக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – திறந்த அமெரிக்க டென்னிஸ் பந்தயத்தில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரப்போவா வெற்றி பெற்றார்.

பிறப்புக்கள்

1828 – லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர், (இ. 1910)
1899 – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர், (இ. 1954)
1941 – தென்னிசு இரிட்சி, அமெரிக்க கணினி நிரலாளர் சி நிரலாக்க மொழியை உருவாக்கியவர் (இ. 2011)
1949 – சுசீலோ பாம்பாங் யுதயோனோ, இந்தோனேசியாவின் 6வது அரசுத்தலைவர்
1953 – மஞ்சுளா விஜயகுமார், இந்திய நடிகை (இ, 2013)
1966 – ஆடம் சேண்ட்லர், அமெரிக்க நடிகர்
1967 – அக்சே குமார், இந்திய நடிகர்
1991 – ஒஸ்கார், பிரேசில் காற்பந்து வீரர்

இறப்புகள்

1087 – இங்கிலாந்தின் முதலாம் வில்லியம், இங்கிலாந்து அரசன் (பி. 1028)
1569 – பீட்டர் புரூகல், ஓவியர் (பி. 1525)
1947 – ஆனந்த குமாரசுவாமி, கலாயோகி (பி. 1877)
1976 – மாவோ சே துங், சீனாவின் முதல் தலைவர், பொதுவுடமைவாதி (பி. 1893)
2003 – எட்வர்ட் டெல்லர், ஐதரசன் குண்டைக் கண்டுபிடித்தவர், அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1908)
2005 – இளையபெருமாள், தலித் தலைவர் (பி. 1924)
2011 – காந்திமதி, நடிகை
2012 – சங்கர் சங்கரமூர்த்தி, பிபிசி தமிழோசை ஒலிபரப்பாளர்
2012 – வர்கீஸ் குரியன், இந்தியத் தொழிலதிபர் (பி. 1921)

சிறப்பு நாள்

தஜிகிஸ்தான் – விடுதலை நாள் (1991)
வட கொரியா – குடியரசு நாள் (1948)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives