சாரிடன் உள்ளிட்ட 327 வகையான மருந்து வகைகளின் உற்பத்தி, விற்பனைக்கு மத்திய அரசு தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2018

சாரிடன் உள்ளிட்ட 327 வகையான மருந்து வகைகளின் உற்பத்தி, விற்பனைக்கு மத்திய அரசு தடை



சாரிடன், டாக்ஸிம் உள்ளிட்ட 327 வகையான மருந்து வகைகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடி தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருந்துகள், தொழில்நுட்ப ஆலோசனை குழு அளித்த ஆய்வறிக்கையின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட கலவை அளவு கொண்ட மருந்து மாத்திரைகளில் எவற்றையெல்லாம் ஒழுங்குப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடித்து பரிந்துரை செய்ய வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், மாத்திரைகள் பற்றி மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக்கழகம் ஆய்வு செய்தது. அதில் குறிப்பிட்ட இருமல் மருந்துகள், வலி தீர்க்கும் மாத்திரைகள் ஆகியவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது ஆய்வில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சாரிடன், டாக்ஸிம் AZ, பன்ட்ரம் கீரிம், உள்ளிட்ட 327 மருந்து, மாத்திரைகளை பயன்படுத்த தடை விதிக்குமாறு சுகாதார அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. 2016 மார்ச் 10-ம் தேதி தடை விதிக்கப்பட்ட 344 மருந்துகளில் 15 வகை மருந்துகள் 1988-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதிக்கு முன்பே உற்பத்தி செய்யப்பட்டுவிட்டதால் அவற்றுக்கு விலக்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி