சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கை ஒரு நபர் குழு புறக்கணிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2018

சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கை ஒரு நபர் குழு புறக்கணிப்பு!


“சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையை ஒரு நபர் குழு கணக்கில் எடுத்து கொள்ளவில்லை” என்று சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பு  குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் கன்வீனர் மு.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின்படி அண்மையில் தமிழக அரசு அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் மாற்றம், ஓய்வூதியம் மாற்றம் செய்தது. ஆனால் சத்துணவு மற்றும்  அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி பதவி உயர்வு பெற்ற மகளிர் ஊர்நல அலுவலர், தொகுதி மேற்பார்வையாளர்கள் மற்றும் பிறதுறைக்கு பணி சென்ற ஆசிரியர்கள், கிராம நிர்வாக  அலுவலர்களுக்கு சத்துணவு திட்டத்தில் பணியாற்றிய காலத்தை ஐம்பது விழுக்காடு கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.

இதனால், ‘’ஊருக்கு சோறு போட்ட ஊழியர்கள்இல்லத்தில் சோறுக்கு வழியில்லாத’’ நிலை ஏற்பட்டு பரிதவித்து வருகின்றனர். இதே போல் மாநிலம் முழுவதும் சுமார் 5000க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வூதியம் இல்லாமல் இருந்து  வருகின்றனர்.மேலும் பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரியும் ஆண் சத்துணவு அமைப்பாளருக்கும், பெண் சத்துணவு அமைப்பாளருக்கும் பதவி உயர்வு என்ற பெயரில் ஊதியம் நிர்ணயம் செய்து  வெளியிட்ட அரசாணை நிலை எண் 12ல் உள்ள குறைபாடுகளை களைய அரசால் நியமிக்கப்பட்ட கமிட்டி கிணற்றில் போட்ட கல்லாய் உள்ளது வேதனைக்குரியது. இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி