இடைநிற்றலை குறைக்க கல்வித்துறை, 'அதிரடி' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2018

இடைநிற்றலை குறைக்க கல்வித்துறை, 'அதிரடி'

மலை மாவட்ட மாணவர்களின் இடை நிற்றலை குறைக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில், 4,343 மாணவர்களுக்கு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பாளர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரியை பொறுத்தவரை, வனப்பகுதிகள், போக்குவரத்து வசதி கள் இல்லாத இடங்களில் உள்ள குழந்தைகள், பள்ளிக்கு வருவதில்லை என்ற புகார் உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம், 6 முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில், நீலகிரி மாவட்ட பகுதிகளில், தொலைவில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த மாணவர்களை,பள்ளிக்கு அழைத்து வரும் வகையில், 142 பள்ளிகளைச் சேர்ந்த, 3,331 மாணவர்களுக்கு, போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வனம், வன விலங்குகள் அச்சுறுத்தல் உள்ள, 92 பள்ளிகளைச் சேர்ந்த, 1,012 மாணவர்களுக்கு பாதுகாப்பாளர்கள் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம், மாணவர்களின் இடை நிற்றலை குறைக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பாளர் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, பள்ளிகள் வங்கி கணக்கில், 67 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி