மாணவர் சேர்க்கை அதிகரிக்க அவகாசம் குறைவு:அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2018

மாணவர் சேர்க்கை அதிகரிக்க அவகாசம் குறைவு:அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு.


*அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான காலஅவகாசம் குறைந்து வருவதால், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பள்ளி நிர்வாகங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

*துவக்கம் முதல் மேல்நிலை வரை உள்ள அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் மாணவர் விகிதம் அடிப்படையில், மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளை இணைக்க அரசு திட்டமிட்டது.

*இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை அதிகாரிகள், மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளின் பட்டியல் அனுப்பப்பட்டது. ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்தபட்சமாக, 4 பள்ளிகள் இப்பட்டியலில் இடம் பெற்றன.

*மேலும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில், மாணவர் எண்ணிக்கை குறைவான பள்ளிகளில் இருந்த கூடுதல் ஆசிரியர்கள், வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.பள்ளிகளை இணைப்பதனால், மீண்டும் 'சர்ப்பிளஸ்', அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

*இதற்கு, தீர்வாக, மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம், ஆசிரியர்களுக்கான மாறுதல் மட்டுமின்றி, பள்ளிகளை இணைக்கும் திட்டத்தையும் அரசு கைவிடும் என அறிவிக்கப்பட்டது.

*மாணவர்களுக்கான சேர்க்கை நடத்த, ஆக., மாதம் வரைமட்டுமே வழக்கமாக அவகாசம் வழங்கப்படும். நடப்பாண்டில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, செப்., மாத இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

*இந்நிலையில், நடப்பாண்டில், 'கிண்டர் கார்டன்', வகுப்புகளும் பள்ளிகளில் துவக்கப்படும் என்ற அறிவிப்புகளும், பள்ளி நிர்வாகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

*தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ''பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தான், மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். சில பகுதிகளில், குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பள்ளிகளிலும் சரிந்துள்ளது.

*அரசு வழங்கிய அவகாசம் நிறைவு பெற குறுகிய நாட்கள் மட்டுமே உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, பள்ளிகளில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

*அரசு எடுக்கும் நடவடிக்கை அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி