பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2018

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்



வேலையில் சேரும்போதே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை என்று பள்ளி கல்வி துறை  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை தமிழக அரசு சிறப்பு ஆசிரியர்கள் என்ற அடிப்படையில்  பணி நியமனம் செய்தது.  இதுபோன்று தமிழகம் முழுவதும் 16,500 ஆசிரியர்கள் உள்ளனர். பணியில்  சேரும்போது ரூ.5ஆயிரமும், பின்னர் படிப்படியாக  தற்போது ரூ.7,700 சம்பளம்  வழங்கப்படுகிறது.

வேலைக்கு சேரும்போதே பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது  என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனாலும்,  இவர்கள் சொந்த ஊர்களுக்கு  பணிமாறுதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்துக்கு 3 நாட்களும்,  அந்த மூன்று நாட்களும் 2 மணி நேரம் மட்டுமே  இவர்கள் பணி செய்வார்கள். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை.  போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் துறை செயலாளர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.தமிழகத்தில் 82 ஆயிரம் ஆசிரியர்கள் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஆசிரியர் தகுதி ேதர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

 தமிழக அரசு  பள்ளிகளில் காலி பணியிடம் இல்லாததால் காத்திருப்போர் பட்டியலில் அவர்கள் இருக்கிறார்கள். இனிமேல் அந்த நிலை இருக்கக்கூடாது என்ற  நிலையில்தான் 2013ல் இருந்த ஆசிரியர்களுக்கும் இப்போது இருக்கும் ஆசிரியர்களுக்கும் வெயிட்டேஜ் என்ற முறையில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.  அதை நாங்கள் வாபஸ் பெற்றிருக்கிறோம். அன்றைய மதிப்பெண் வேறு, இன்றைய மதிப்பெண் வேறு. இதை மாற்றி அமைத்ததற்கு பிறகு அரசு பள்ளிகளில் காலி  பணியிடங்கள் எவ்வளவு என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அந்த காலி பணியிடங்களுக்கு ஏற்ப அரசு தேர்வாணையம் மூலம் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் தலா 50  லட்சம் ரூபாய் செலவில் மாடர்ன் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில், எழும்பூரில் உள்ள பிரின்ஸ் பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் 7  குழந்தைகள் சேர்ந்துள்ளனர். புதிதாக ஆரம்பித்துள்ளோம். அரசின் பணியை பார்த்துக்கொண்டு இன்னும் நிறைய குழந்தைகள் வருவார்கள். இவ்வாறு அவர்  கூறினார்.

8 comments:

  1. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சட்டம் பேசவதாக இருந்தால் அன்று அறிவித்தது போல் ஒரு பகுதிநேர ஆசிரியர் குறைந்தது மூன்று பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது ஏன் இன்று வரையிலும் அதை நடைமுறை படுத்த வில்லை.மேலும் மே மாதத்தில் ஊதியம் கிடையாது என்று கூறவே இல்லை.இப்படி இருக்கும் போது சட்டம் பேசுவதாக இருந்தால் பகுதி நேர ஆசிரியர்கள் வாழ்வாதார நிலை களை உணர்ந்து அவற்றை தீர்வு காணும் வகையில் அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து பதிலளிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. Super. Apadiye tet pass pannavangaluku posting potta nalla irukum

    ReplyDelete
  3. மாண்புமிகு அமைச்சர் அவர்களே நீங்கள் கூறுவது பாேல் பகுதிநே ர ஆசிரியர்களுக்கு ஊதியஉயர்வு இல்லை .சரி எம்.எல்.ஏ கள் முழுநேர அரசு ஊழியரா? அவர்களுக்கு எப்படி ஊதிய உயர்வு ?

    ReplyDelete
  4. அப்படியே MLA வை தொகுப்பூதியத்தில் பணியாற்ற சொல்லுங்க பார்ப்போம்.

    ReplyDelete
  5. Govt ல நிதி இல்லையே MLA யாரும் Rs.105000 சம்பளம் வாங்காதிங்க

    ReplyDelete
  6. அப்ப நாமும் வேலைக்கு வந்தால் 5 வருடத்திற்கு ஒரு முறை தேர்வு எழுதவேண்டுமா

    ReplyDelete
  7. Tntet posting poda vaippu illai,negalum next election LA deposit vanga vaipu illai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி