இடைநிலை கல்வி 'SCHOLARSHIP' வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2018

இடைநிலை கல்வி 'SCHOLARSHIP' வாய்ப்பு

பள்ளி படிப்புக்கான கல்வி உதவி தொகைக்கு,
30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.சிறுபான்மையின மாணவர்கள், பள்ளி படிப்பை பாதியில் கைவிடாமல் இருக்க, மத்திய அரசு சார்பில், இடைநிலை கல்வி உதவி தொகை திட்டம் அமலில் உள்ளது. இந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து, 1.12 லட்சம் மாணவர்கள், இந்த திட்டத்தில் உதவி தொகை பெற, தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் மாணவர்கள் - 54 ஆயிரத்து, 259 பேர்; கிறிஸ்தவர் - 56 ஆயிரத்து, 682 பேர்; சீக்கியர் - 187; பவுத்தர் - 144; ஜெயின் - 1,145; பார்சி - 2 பேர் என, 1.12 லட்சத்து, 419 பேருக்கு உதவி தொகை வழங்கப்பட உள்ளது.இதற்கு தகுதியான மாணவர்கள், மத்திய அரசின், http://www.scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்க, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு, அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

1 comment:

  1. there is no list appears for school level verification in institute login.please consider and give a solution for that.
    thank you

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி