S.S.C - தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2018

S.S.C - தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை

மத்திய அரசு கடந்தாண்டு நடத்திய எஸ்.எஸ்.சி தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 மத்திய அரசுப் பணிகளில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களை தேர்வு செய்வதற்காக கடந்தாண்டு பணியாளர் தேர்வு குழு (எஸ்எஸ்சி) தேர்வு நடத்தப்பட்டது.

இதில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தேர்வு எழுதியவர்கள் போராட்டம் நடத்தினர். தேர்வு நடத்தும் பொறுப்பை தனியார் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டதால்தான் முறைகேடுகள் நடந்ததாக தேர்வு எழுதியர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து சிபிஐ விசாரணக்கும் உத்தரவிடப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதிகள் பாப்டே, நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில், ‘எஸ்.எஸ்.சி அதிகாரிகள் மற்றும் தேர்வை நடத்தியவர்கள் மீது தவறு இருக்கிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் பிரசாந்த் பூஷன், கோவிந்த்ஜி ஆகியோர் வாதிடுகையில்,  ‘‘தேர்வு நடத்தியவர்களை வினாத்தாளை கசியவிட்டதாக சிபிஐ தனது முதல் அறிக்கையிலேயே ஒப்புக் கொண்டுள்ளது. அதனால், இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ள தேர்வு முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றனர்.

அதன்பின் தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘‘கடந்தாண்டு நடத்தப்பட்ட எஸ்.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது முதல்கட்ட விசாரணையிலேயே தெரிகிறது. எஸ்.எஸ்.சி அதிகாரிகள் மற்றும் தேர்வு நடத்தியவர்கள் மீது சிபிஐ குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதால், இந்த தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது’’ என்று அறிவித்தனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி