1474 முதுகலை ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் எவ்வாறு நிரப்ப வேண்டும்? பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை! - kalviseithi

Oct 6, 2018

1474 முதுகலை ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் எவ்வாறு நிரப்ப வேண்டும்? பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!


நடப்பு கல்வியாண்டில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், 1,474 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை விபரம்: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் பெறப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப, கால அவகாசமாகும். இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் நலன் கருதி, தொகுப்பூதிய அடிப்படையில், காலிப்பணியிடம் நிரப்ப அனுமதி வழங்கப்படுகிறது.

ஆறு மாத காலத்துக்கு மட்டும், தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலை பிரிவுக்கான உதவி தலைமை ஆசிரியர், மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் கொண்ட குழு மூலம், நிரப்பலாம். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய, 11 பாடங்களுக்கு மட்டும் நிரப்ப வேண்டும்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பி, மாதம், 7,500 ரூபாய் வீதம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமின்றி, நியமனம் நடக்க வேண்டும். இதை பள்ளி தலைமை ஆசிரியர் கண்காணித்து, உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாவட்டம் - ஆசிரியர் எண்ணிக்கை
அரியலூர் - 21
சென்னை - 14
கோவை - 45
கடலூர் - 35
தர்மபுரி - 17
திண்டுக்கல் - 21
ஈரோடு - 61
காஞ்சிபுரம் - 77
கன்னியாகுமரி - 17
கரூர் - 23
கிருஷ்ணகிரி - 33
மதுரை - 15
நாகை - 135
நாமக்கல் - 30
பெரம்பலூர் - 20
புதுக்கோட்டை - 46
ராமநாதபுரம் - 28
சேலம் - 30
சிவகங்கை - 12
திருவண்ணாமலை - 117
தஞ்சை - 60
நீலகிரி 67
தேனி - 11
திருநெல்வேலி - 35
திருப்பூர் - 36
திருவள்ளூர் - 106
திருவாரூர் - 97
திருச்சி - 31
தூத்துக்குடி - 32
வேலூர் - 120
விழுப்புரம் - 62
விருதுநகர் - 20
மொத்தம் - 1,474

11 comments:

 1. மாணவர்களின் நலன் கருதி நிரந்தர ஆசிரியர்களை போட்டித்தேர்வின் மூலம் நியமனம் செய்யுங்கள்.

  ReplyDelete
 2. அமுதசுரபி பயிற்சி மையம்
  கிருஷ்ணகிரி.
  9952448373

  ReplyDelete
 3. அமுதசுரபி பயிற்சி மையம்
  PG TRB தமிழ் கிருஷ்ணகிரி
  9952448373

  ReplyDelete
 4. இப்படியே சொல்லி கொண்டே இருங்க தொடக்க பள்ளியில் 3000 பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது போல இப்பள்ளியிலும் மாணவர் சேர்க்கை குறைந்து மூடும் நிலை வரும்

  ReplyDelete
 5. Please conduct second transfer counselling for teachers 1474 family members valthum nirvaga maruthal seiyathunga. Lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum kadasila sothu panam kooda varathu unga peyar than entaikkum nulaitthu nirkum panam panam vangi transfer order kodukkatheenga lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum
  Kanyakumari district vacancy not displayed year by year one or two vacancy varum athey kooda kattale ellam avanavan seyal uppu thinnavan thanni kudiche aaganum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum

  ReplyDelete
 6. Pl.sir.immediately appointment pg asst. regular post.

  ReplyDelete
 7. நிரந்தர பணிக்கு மட்டுமே செல்லுங்கள் நண்பர்களே, இதற்க்கு சென்றால் நம்மை ஏமாற்றிவிடுவார்கள்,

  ReplyDelete
 8. Please respected teachers we need permanent post only not temporary. Nammala ematruvatharku than intha posting.intha vacancy fill pannuna exam late agum. So please carefully.

  ReplyDelete
 9. அனைத்து முதுகலை ஆசிரியர்களும் இந்த தற்காலிக பணியில் சேர வேண்டாம் நம்மை இதற்கே அடிமையாக்கி விடுவார்கள் 3 மாதத்தில் தேர்வு வைத்து பணி நியமனம் செய்யலாம் ஆனல் குறைந்த ஊதியத்தில் நம்மை பயன்படுத்தி கொள்வார்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி