தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் சங்கம் - மதுரை மாவட்ட தோ்தல்! - kalviseithi

Oct 15, 2018

தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் சங்கம் - மதுரை மாவட்ட தோ்தல்!


தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் சங்க மதுரை மாவட்ட தோ்தல், மதுரை M.C.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட தோ்தல் ஆணையாளராக தேனி மாவட் தலைவர் திரு. மணிவன்ணன் அவா்கள் தேர்தலை நடத்தினாா். பின்வரும் பொறுப்பாளா்கள் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மதுரை மாவட்ட தலைவராக திரு. தனபால்  ஜெயராஜ், செயலாளராக திரு. பாஸ்கரன், பொருளாளராக திரு. முத்துப்பிள்ளை, அமைப்புச் செயலாளராக திரு. ரகுபதி, மகளிரணி அமைப்பு பொறுப்பாளராக திருமதி. ஜமுனா, மாவட்ட துணைத்தலைவர்களாக திரு. முத்தையா, திரு. ஜோசப் சகாயம், இணைச்செயலாளா்களாக திரு. செந்தில்குமாா், பாலாஜி, சட்ட செயலாளராக திரு. அசோக்குமாா், பிரச்சார செயலாளராக திரு. ராஜசேகரன் , தலைமை நிலையச் செயலாளராக திரு. அதிராம் சுப்பு ஆகியோா் தேர்ந்தெடுக்கப்பட்டனா்.

தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் சங்கம் கள்ளா் பள்ளிகள் கிளையின் மாவட்ட செயலாளா்  திரு. நவநீதகிருஷ்ணன், தமிழக தமிழாசிரியா் கழக மாவட்ட செயலாளா் திரு சுப்பிரமணியன், தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் சட்ட செயலாளா் திரு. வெங்கடேசன், தமிழ்நாடு முதுகலைப்பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் முன்னாள் பொருளாளா் திரு. ராஜசேகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பொருளாளா் திரு. முத்துப்பிள்ளை நன்றி கூறினாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி