தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களின் புதிய சீருடை வெளியீடு!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களின் புதிய சீருடை வண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பச்சை நிற அரைகால் சட்டையும், இளம்பச்சை நிறக் கோடிட்ட மேல் சட்டையும் சீருடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பழுப்பு நிறத்தால் ஆன முழுக்கால் சட்டையும், பழுப்பு நிறத்தால் ஆன கோடிட்ட மேல் சட்டையும் சீருடையாக வழங்கப்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த புதிய சீருடை திட்டம் வரும் கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த சுற்றறிக்கை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரால் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1 comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Employment seniority valai pattadhan vayathu athikam irukarvanga valaikku povanga avanga4,5,varudam valai saithu avargaladhu kudumpam ungalai valdhum
ReplyDelete