அனைத்து பள்ளிகளுக்கும் இன்டர்நெட் வசதி, ஆசிரியர்களுக்கு லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2018

அனைத்து பள்ளிகளுக்கும் இன்டர்நெட் வசதி, ஆசிரியர்களுக்கு லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன்


கோபி அருகே அளுக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், 62 பயனாளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று விவசாய கடன் வழங்கினார்

விழாவில் அவர் பேசியதாவது:

மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் மற்றும் அதிகாரிகளிடம், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பினருக்கு, டேப் வழங்குவது குறித்து கடிதம் வழங்கப்பட்டுள்ளது

*ஜன., மாதம் இறுதிக்குள், நிதியளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். இதனால், 11.12 லட்சம் மாணவர்கள், டேப் மூலம் பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ளலாம்

*ஜன., மாதத்தில் 52 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி, முதல்வரின் ஒப்புதலோடு, எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகள் கொண்டு வரப்படும். டிச., மாதம் இறுதிக்குள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த, 11.17 லட்சம்மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும்

*இதே வகுப்பினருக்கு ஜன.,மாதம் முதல் வாரத்தில்லேப்டாப் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்க, வேண்டுகோள் வந்துள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்

*திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில், அனைத்து பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதிக்கு, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்

11 comments:

  1. இந்த நோயின் பெயர் பேட்டியோபதி. இந்த நோயின் ஆரம்ப நிலை மைக் கிடைக்கும் இடங்களில் கன்டதை உளறுவது (ஆட்சி இருக்கும் பொழுது)
    முடிவு பைத்தியம் பிடித்து தேவையற்று உளறுவது(ஆட்சி இழந்த பிறகு)

    ReplyDelete
    Replies
    1. ha ha..😃😀😃yes sir antha batiyobathi vaayi naara vaayi apdithan kandatha peasi padichavangala eamathum..

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இவன் மூஞ்ச பாத்தாலே எரிச்சலா இருக்கு

    ReplyDelete
  4. சும்மா காமடி பன்னாதிங்க ம_கு _ அமைச்சரே .,..... பள்ளிகளுக்கு செய்தித்தாள் வந்தா மாதிரித் தான் எல்லா அறிவிப்பும் இருக்கும்

    ReplyDelete
  5. But there is no action among b.ed computerscience posting.regarding this education minister has to give big move of computer science students

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி