சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு புதிய விதிகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2018

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு புதிய விதிகள் வெளியீடு


சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கு, புதிய விதிகள் வெளியிட பட்டுள்ளன. உள் கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, இடத்தின் அளவு உள்ளிட்டஅனைத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு ,புதிய விதிகள், வெளியீடுநாடு முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அங்கீகாரத்தில் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளில், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.குறிப்பாக, பள்ளிகள் தரப்பில் போலி ஆவணங்கள் கொடுத்து, அங்கீகாரம்பெற்று விடுவதாக, புகார்கள் எழுந்தன.அதேபோல, ஆசிரியர்நியமனம், மாணவர் சேர்க்கை, கட்டண வசூல் ஆகியவற்றிலும், முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் குவிந்தன.

இது குறித்து, மத்திய மனிதவள அமைச்சகம் ஆலோசனைநடத்தி, புதிய விதிகளை உருவாக்க உத்தரவிட்டது. இதன்படி, சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் வழங்குவதில், ஒவ்வொரு மாநில அரசுக்கும் கூடுதல் அதிகாரம் அளித்து, விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்கான முறையான அறிவிப்பை, அக்., 18ல், மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் வெளியிட்டார்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட அங்கீகார இணைப்பை பெறுவதற்கான, புதிய விதிகள் சி.பி.எஸ்.இ.,யின்,http://cbse.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

இதில், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறை களின் தரம், கல்வி தரம், பின்பற்ற வேண்டிய புத்தகம், மாணவர்களை சேர்க்கும் முறை, கட்டண விதிகள், பள்ளிக்கு தேவையான நில அளவு,சான்றிதழ் பெற வேண்டிய அமைப்புகள் உள்ளிட்ட அனைத்தி லும், மாற்றம் செய்யப் பட்டு உள்ளது.இந்த விதிப்படியே, இனி அனைத்து பள்ளிகளுக்கும் புதிய இணைப்பும், அங்கீகார நீட்டிப்பும் வழங்கப்படும். மேலும், அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், மாநில அரசின் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி