பத்தாம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கான, தேர்ச்சி மதிப்பெண்ணில், சலுகையை நீட்டித்து, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2017 - 18 முதல், பொது தேர்வு முறை அமலானது. அதுவரை, பள்ளி அளவில் நடந்த தேர்வு முறை மாற்றப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே, மாணவர்களின் தேர்ச்சி பாதிக்காமலிருக்க, மதிப்பெண்ணில் சலுகை வழங்கி, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டது.இதன்படி, 10ம் வகுப்பு பொது தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும், 33 சதவீதமும், அக மதிப்பீட்டில், 33 சதவீதமும், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை, 2017 - 18க்கு மட்டும் தளர்த்தப்பட்டது.
பாடத்திலும், அகமதிப்பீட்டிலும் சேர்த்து, 33 சதவீத மதிப்பெண் பெற்றாலே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என, கூறப்பட்டது.இந்தச் சலுகை, ஓர் ஆண்டுக்கு மட்டுமே என, 2017ல், தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், 'இந்த ஆண்டும், சலுகையை நீட்டிக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தேர்ச்சி மதிப்பெண்ணுக்கான, 2017 - 18க்கான சலுகையை, நடப்பு கல்வி ஆண்டுக்கும் நீட்டித்து, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சன்யம் பரத்வாஜ், அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
தம்பி இப்போ 2018-19 ஓடிட்டு இருக்கு...
ReplyDelete