'கஜா'வால் பாதித்த பள்ளிகள்: சீரமைக்க சிறப்பு குழுக்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2018

'கஜா'வால் பாதித்த பள்ளிகள்: சீரமைக்க சிறப்பு குழுக்கள்!


கஜா' புயலால் பாதிக்கப்பட்ட, பள்ளி கல்வி கட்டமைப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் தாக்கிய, கஜா புயல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலுார், நாகை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், பெரும் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது.தனியார் நிறுவனங்கள், வீடுகள் மட்டுமின்றி, மின் கட்டமைப்புகள், சாலைகள், அரசு அலுவலக கட்டடங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதில், பள்ளி, கல்லுாரி களில், உள் கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.பல இடங்களில், வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றில் ஜன்னல்கள், மேற்கூரைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. சில இடங்களில் மாணவர் விடுதிகளும், கழிவறைகளும் இடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த சேதங்களை விரைவில் சரி செய்து, மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்த, அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சென்றுள்ள, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.பாதிக்கப்பட்ட பள்ளி கட்டடங்களை சீரமைக்க, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி