நாகை, வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையைக் கடக்க தொடங்கியது : வானிலை மையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2018

நாகை, வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையைக் கடக்க தொடங்கியது : வானிலை மையம்



நாகை, வேதாரண்யம் இடையே கஜா புயல் முன்பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்க தொடங்கியதால் நாகை, வேதாரண்யத்தில் 110 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது. காரைக்காலில் இருந்து 80 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளதாகவும், வேதாரண்யத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் புயலின் மையபகுதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் அதிகரிப்பு

நாகையில் கனமழை பெய்து வரும் நிலையில் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருக்கிறது. புயல் கரையை நெருங்கும் நிலையில் அதிக சத்தத்துடன் காற்று வீசி வருகிறது.

மின் இணைப்பு துண்டிப்பு

தஞ்சை மாவட்டத்தில் 25 கடலோர கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

67,000 பேர் முகாம்களில் தங்க வாய்ப்பு

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 347 முகாம்களில் 67,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் 10,420, நாகை 44,087, ராமநாதபுரம் - 913, தஞ்சை 4,678, புதுக்கோட்டை 1,881, திருவாரூர் 5189 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி