DEO - காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு அடிப்படையில் கலந்தாய்வு எப்போது ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2018

DEO - காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு அடிப்படையில் கலந்தாய்வு எப்போது ?


பதவி உயர்வு அடிப்படையில் நிரப்ப வேண்டிய, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விரைவில், கலந்தாய்வு நடத்த வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
புதிய நிர்வாக சீர்த்திருத்த நடவடிக்கைகளால், மாவட்ட கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை, 119 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்ட கல்வி அலுவலகங்களுக்கு, பிரத்யேக அலுவலகம் இல்லை.

அரசுப்பள்ளி வளாகத்திற்குள் கல்வி அலுவலகம் செயல்படுவதோடு, அலுவலக பணியாளர் காலியிடங்கள், நிரப்ப வேண்டுமென்ற, நீண்டநாள் கோரிக்கை நிலுவையில் உள்ளது. இதோடு, 50 கல்வி மாவட்டங்களுக்கான அதிகாரி பணியிடங்கள், பொறுப்பு அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இப்பதவியை கூடுதலாக பொறுப்பேற்றுள்ளதால், பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்படுகின்றன. பொறுப்பு அதிகாரிகளால், 'சீனியாரிட்டி' அடிப்படையில் வேறு பணியிடங்களுக்கு, செல்வதிலும் சிக்கல் உள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு, நிரந்தர அலுவலர் நியமிக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,''தமிழகத்தில், 50 கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. ''பதவி உயர்வு அடிப்படையில், டி.இ.ஓ.,வாக நியமிக்கப்படுவோர், ஓராண்டுக்கு பின், முதன்மை கல்வி அலுவலராகவும், பொறுப்பேற்க இயலும். பொறுப்பு அதிகாரிகள் நியமித்துள்ளதால், சீனியாரிட்டி பட்டியலில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பணியிடங்களில் நிரந்தர அலுவலர் நியமிக்க கலந்தாய்வு நடத்த வேண்டும்,'' என்றார்.

11 comments:

  1. DEO Preliminary and main exam original question paper available. prelims objective gk common for all subjects and main descriptive 3papers. 2 gk descp common for all subject and 3 subject papers. contact 9884678645

    ReplyDelete
  2. DEO Preliminary and main exam original question paper available. prelims objective gk common for all subjects and main descriptive 3papers. 2 gk descp common for all subject and 3 subject papers. contact 9884678645

    ReplyDelete
  3. Please tell the qualifications for deo

    ReplyDelete
    Replies
    1. Thank u sir . Age limit?.those who r in govt job only can apply r All?

      Delete
  4. Pg Trb commerce friends nala padinga 9952636476

    ReplyDelete
  5. MA.b.ed economics eligible unda sir

    ReplyDelete
  6. தமிழகத்திலேயே முதன் முறையாக முதுநிலை வேதியியல் ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி முற்றிலும் தமிழ் வழியில்.வகுப்புகள் துவங்கும் நாள்: 08-12-2018 (சனிக்கிழமை)நேரம்: காலை 10.00 மணிபயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஆதார் அடையாள அட்டையை புகைப்படம் எடுத்து அனுப்பி தங்களின் முன்பதிவை உறுதி செய்து கொள்ளவும். முன்பதிவு அவசியம்.அறிவார்ந்த ஆசான் பயிற்சி மையம்சபரி டிஜிட்டல் மாடியில் ( 3வது மாடி)தமிழ்க்களம் புத்தக நிலையம் அருகில்செநதுறை ரோடுஅரியலூர்.தொடர்புக்கு: 8778977614, 9942571857நன்றி.

    ReplyDelete
  7. Deo main exam
    paper 3 (200)
    education or major
    Objective or descriptive

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி