Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

உலக வரலாற்றில் இன்று ( 04.12.2018 )டிசம்பர் 4 கிரிகோரியன் ஆண்டின் 338 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 339 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 27 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1259 – பிரான்சின் ஒன்பதாம் லூயி இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றியும் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் ஆங்கில புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.
1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி ஒப்சேர்வரின் முதலாவது இதழ் வெளிவந்தது.
1829 – ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1918 – முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் பிரான்ஸ் சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும்.
1943 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவின் எதிப்புத் தலைவர் யோசிப் டீட்டோ “சனநாயக யூகொசுலாவிய அரசு” ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.
1945 – ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.
1952 – லண்டனை குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் காற்று மாசடைந்தமையால் அடுத்தடுத்த வாரங்களில் மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர்.
1957 – ஐக்கிய இராச்சியத்தில் லூவிஷாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
1958 – பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் டொஹெமி சுயாட்சி உரிமை பெற்றது.
1959 – ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.
1967 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா, மற்றும் தெற்கு வியட்நாம் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதினர்.
1971 – இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.
1971 – பாக்கித்தானின் கடற்படையினரையும் கராச்சி நகரையும் இந்தியக் கடற்படையினர் தாக்கினர்.
1976 – ஆச்சே விடுதலை இயக்கம் அமைக்கப்பட்டது.
1977 – மலேசியாவின் விமானம் ஒன்று கடத்தப்பட்டு ஜொகூர் என்ற இடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
1984 – குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.
1984 – 1984 மன்னார் படுகொலைகள்: இலங்கைப் படையினர் மன்னாரில் 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர்.
1991 – டெரி அண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார்.
1991 – ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
1992 – ஐக்கிய அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது.
2005 – ஹொங்கொங்கில் பல்லாயிரக்கணக்கானோர் சனநாயகம் வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறப்புகள்

1875 – ரெய்னர் மரியா ரில்கே, ஆத்திரியக் கவிஞர் (இ. 1926)
1892 – பிரான்சிஸ்கோ பிராங்கோ, எசுப்பானியப் பிரதமர் (இ. 1975)
1910 – ரா. வெங்கட்ராமன், 6வது இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 2009)
1919 – ஐ. கே. குஜரால், 12வது இந்தியப் பிரதமர் (இ. 2012)
1949 – ஜெப் பிரிட்ஜஸ், அமெரிக்க நடிகர்
1963 – செர்கய் புப்கா, உக்ரைனிய தடியூண்டித் தாண்டும் விளையாட்டு வீரர்
1969 – ஜெய்-சி, அமெரிக்க ராப் இசைக் கலைஞர்
1977 – அஜித் அகர்கர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1982 – நிக் வோய்ச்சிச், ஆத்திரேலிய மதப் போதகர்

இறப்புகள்

கிமு 530 – சைரசு, பாரசீகப் பேரரசை நிறுவியவர்
749 – தமாஸ்கஸ் நகர யோவான், சிரிய மதகுருவும், புனிதரும் (பி. 676)
1131 – ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர், வானியலாளர், மெய்யியலாளர், கணிதவியலாளர் (பி. 1048)
1679 – தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1588)
1898 – க. சீ. கிருட்டிணன், இந்திய இயற்பியலாளர் (இ. 1961)
1976 – ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர் (பி. 1900)
2014 – வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் (இ. 1914)

சிறப்பு நாள்

இந்தியா – கடற்படையினர் தினம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives