பிளஸ் 1 தேர்வில் தோல்வி 28 ஆயிரம் பேருக்கு, 'கல்தா' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2018

பிளஸ் 1 தேர்வில் தோல்வி 28 ஆயிரம் பேருக்கு, 'கல்தா'


பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாததால், 28 ஆயிரம் மாணவர்கள், பள்ளிகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்கள், பள்ளி மாணவர்களாகவே தேர்வு எழுத, சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 ,தேர்வில், தோல்வி, 28 ஆயிரம் ,பேருக்கு,கல்தாபள்ளி கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பதவி ஏற்ற பின், பள்ளி கல்வியில், 2017 முதல், பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.முக்கிய மாற்றமாக, பொதுத் தேர்வு மாணவர் களுக்கான தர வரிசை நீக்கம் செய்யப்பட்ட துடன், பிளஸ் 1ல் பொது தேர்வும் அறிமுகம்செய்யப்பட்டது. முதல் முறையாக, 2017 - 18ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு நடந்தது.

இந்த தேர்வில், தனித்தேர்வர்களு டன் சேர்த்து, 8.63 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 91.3 சதவீதமான, 7.88 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.இந்த தேர்வில்,பள்ளி மாணவர்கள், 8.47 லட்சம் பேர் பங்கேற்றதில், 7.74 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்; 73 ஆயிரத்து, 800 பேர், சில பாடங்களில் தோல்வி அடைந்தனர். அவர்களை, பள்ளிகளில் இருந்து அனுப்பாமல், பிளஸ் 2 படிக்க அனுமதிக்கும்படி, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, அரசு தேர்வுத் துறை பதிவு செய்துள்ளது.இந்த விபரங்களை,2017 - 18ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்களுடன் ஒப்பிடுகையில், 28ஆயிரத்து, 167 பேர் விடுபட்டது தெரிய வந்துள்ளது.விடுபட்ட மாணவர்கள், பிளஸ் 1 தேர்வுடன் இடைநிற்றலாகி,தற்போது, பிளஸ் 2 படிக்கவில்லை என, கண்டறியப் பட்டுள்ளதுஇந்த மாணவர்கள் கட்டாயமாக வெளியேற்றப் பட்டனரா அல்லது அவர்களே மாற்றுச் சான்றிதழ் வாங்கி சென்றனரா என, பள்ளி கல்வி துறை விசாரணையை துவக்கி உள்ளது. இந்நிலை யில், 28 ஆயிரத்து, 167 மாணவர்களும், பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 இரண்டு பொது தேர்வையும், பள்ளி மாணவராகவே எழுதும் வகையில், அவர்களுக்கு சலுகை அளித்து, அரசு தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு, ஜன., 5க்குள் தகவல் அனுப்ப, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி