கெமிஸ்ட்ரி ஆசிரியரின் வித்யாசமான அழைப்பிதழ் - அறிவியல் பூர்வமாக வாழ்த்து தெரிவித்த சசிதரூர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2018

கெமிஸ்ட்ரி ஆசிரியரின் வித்யாசமான அழைப்பிதழ் - அறிவியல் பூர்வமாக வாழ்த்து தெரிவித்த சசிதரூர்


வேதியியல் ஆசிரியரின் திருமண அழைப்பிதழுக்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் செய்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'கெமிஸ்டிரி டீச்சரின் திருமண அழைப்பிதழ்' என்ற பெயரில் கடந்த சிலதினங்களாக சமூக வலைதளங்களில் வித்தியசமான திருமண அழைப்பிதழ் ஒன்று பரவி வருகிறது.

இந்த அழைப்பிதழில் மணமக்களின் பெயர்கள் வேதியியல் பாடங்களில் வரும் குறியீடுகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன.இந்த அழைப்பிதழில் நடைபெறும் மணமக்களுக்கு இன்று(14-12-2018)கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இத்தகைய அழைப்பிதழை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதுமட்டுமின்றி,காங்கிரஸ் எம்பி சசிதரூர் தொகுதியில் அந்த கெமிஸ்ட்ரி டீச்சரின் திருமணம் நடைபெறுவதாகவும் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை டீட்வீட் செய்த சசிதரூ, 'அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட மணமக்களுக்கு கெமிஸ்ட் ஸ்பார்க்கிள் ஆகட்டும், பிசிக்ஸ் வெளிச்சத்தை ஏற்படுத்தட்டும், பயாலஜி அழகான குழந்தைகளை அளிக்கட்டும் ' என வாழ்த்தியுள்ளார்.அறிவியல் பெயர்களை கொண்டு வித்தியாசமாக உருவாக்கப்பட்ட அழைப்பிதழுக்கு அறிவியல் ரீதியாகவே சசிதரூர் வாழ்த்து தெரிவித்தது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி