Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கணினி ஆசிரியர் நியமனத்திற்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே செவந்தலிங்கபுரத்தை சேர்ந்த ப்ரியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாகவுள்ள 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 2017ல் வெளியானது. ஆனால், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவில்லை. இதனிடையே,  காலியாகவுள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை டிசம்பர் 2018 முதல் பிப்ரவரி 2019 வரையிலான 3 மாதத்திற்கு மட்டும் தற்காலிகம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ரூ.7,500 சம்பளத்திற்கு ஆங்காங்கே நியமித்து கொள்ள அனுமதித்து, கடந்த டிச.7ல் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையிலான நியமனம் என்பது முறைகேட்டிற்கு வழிவகுக்கும். நியமன நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, கணினி ஆசிரியர் தற்காலிக நியமனத்திற்கான அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். முறைப்படி விதிகளை பின்பற்றி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், தற்காலிக கணினி ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஜன.10க்கு தள்ளி வைத்தனர். 

15 comments

 1. பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யும்போது நீ எங்க...போயிருந்த......இப்ப....என்னா? உனக்கு....

  ReplyDelete
  Replies
  1. நீ...உன் இஷ்டத்திற்கு....Stay வாங்கிட்ட....நானும் ஒரு எம்.எஸ்.சி.பி.எட்...தான்...,7 வருஷமா 3000 சம்பளத்திற்கு...அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலை பார்கிறேன்....இப்போதுதான்....7500 ,வாங்கபோறோம்னு சந்தோசப்பட்டேன்.,அதையும் கெடுத்துபூட்டீங்க.... 1/4 காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசு வாங்கனும்னு சொல்ராங்க....அதையும் கெடுத்துபுட்டீங்க.....நீங்க படிச்சுபுட்டு வீட்டுலேயே இருந்திருப்பீங்க.....அதான் உங்களுக்கு வலி தெரியல....... 2012 ல பகுதி நேர ஆசிரியர் போட்டாங்களே அப்ப என்ன?.......பன்னீங்க....சொல்லுங்க ப்ரியா....

   Delete
  2. 2012 லவ் பகுதி நேர ஆசிரியர்களுக்கான தேர்வு நேர்மையாக நடந்தது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

   Delete
  3. avangalukku ippayavathu arivu vanthathu nammaku athu kooda varalaye enna panrathu

   Delete
 2. கணினி அறிவியல் ஆசிரியர் ஆவது பகல் கனவு என்பது மட்டும் உறுதி

  ReplyDelete
 3. ஒரு ஆளுக்கு கூட Posting கிடைக்காது இந்த Gov.ல்!?Sorry.....

  ReplyDelete
 4. GOVERNMENT SEIVATHAI OLUNGA SEITHAA... IPPADI EAN ETHERKEDUTHALUM CASE PODAPORANKA?

  ReplyDelete
 5. Brenda yarume pakuthi nera teacher velaikku pokama eruntha posting pottuthan aakanum

  ReplyDelete
 6. 10 years ah 3000 salary vanki yepti family Run panningalo aptiye Run pannunga. ..

  ReplyDelete
 7. வரவேற்கதக்கது.. கணினி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை மற்ற ஆசிரியர்கள் போன்ற நிரந்தரமான வேலை தானே தவிர இதேபோல் அல்ல... கட்டாயம் இந்த முறையானது முறைகேட்டிற்க்கே வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.. தமிழக அரசின் மெத்தனத்தால் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி கல்வி எட்டா கணியாகவே உள்ளது..

  ReplyDelete
 8. Priya neenga saithathu sariyanathu 3000 kum 7500 kum valai parpathu kavalama eruku super priya

  ReplyDelete
 9. School la ellam computer mayam but computer teacher Ella loosu pola

  ReplyDelete
 10. indha govt.kum serthu oru stay kodukka kudatha???

  ReplyDelete
 11. School kaninimayakkapadum anal kanini asiriyargal mattum nirantharama poda mattanga...enna niyamnu theriyala...

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் ப்ரியா.இது நியாயமான கருத்து.நானும் m.sc b. Ed தான்.நியாயமான முறையில் தேர்வு நடத்தப்படவில்லை.கனிணி வழி கல்வி குடுப்பாங்களாம்.ஆனா தகுதியான கனிணி ஆசிரியர் தேவையில்லையாம்.எவ்வளவு அறிவா யோசிக்கிறாங்க. கனிணி பட்டதாரிகளுக்கு அநீதி நடக்கிறது. தற்காலிகமான வேலை தேவையில்லை.நிரந்தரமான வேலையை நிர்ணயம் செய்ய வேண்டும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives