'நெஸ்ட்' நுழைவு தேர்வு : விண்ணப்பிக்க அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2019

'நெஸ்ட்' நுழைவு தேர்வு : விண்ணப்பிக்க அவகாசம்


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், அறிவியல் பாடங்கள் தொடர்பாக, ஒருங்கிணைந்த, ஐந்து ஆண்டு, எம்.எஸ்சி., படிப்பில் சேர, நெஸ்ட் என்ற தேசிய நுழைவு மற்றும் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

புவனேஷ்வரில் உள்ள, தேசிய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம், மும்பையில் உள்ள அணுசக்தி துறையின் சீர்மிகு அறிவியல் மையம் ஆகியவற்றில், இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி தொகையும், கோடைகால பயிற்சிக்கு, 20 ஆயிரம்ரூபாய் உதவி தொகையும் வழங்கப்படும்.

இந்த படிப்புக்கான நுழைவு தேர்வு, ஜூன், 1ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான ஆன்லைன் பதிவுகள், ஜன., 7ல் துவங்கின; மார்ச், 11 வரை விண்ணப்ப பதிவுகளை மேற்கொள்ளலாம் என, அவகாசம் தரப்பட்டுள்ளது. மேலும் விபரங்களை, www.nestexam.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி