Flash News : JACTTO GEO வழக்கு நிலவரம் - முதல்வர் அழைத்து பேசினால் போராட்டத்தை கைவிட தயார் - JACTTO GEO : பேச்சுவார்த்தைக்கு நீதிமன்றம் பாலமாக இருக்கும் - நீதிபதி - பேச்சு வார்த்தைக்கு தயார் இல்லை - தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2019

Flash News : JACTTO GEO வழக்கு நிலவரம் - முதல்வர் அழைத்து பேசினால் போராட்டத்தை கைவிட தயார் - JACTTO GEO : பேச்சுவார்த்தைக்கு நீதிமன்றம் பாலமாக இருக்கும் - நீதிபதி - பேச்சு வார்த்தைக்கு தயார் இல்லை - தமிழக அரசு


தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர் தொடர்ந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தங்களின் நிலை குறித்து விளக்கினர்.

இன்று ஐகோர்ட்டில் இவ்விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது, 90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது என நீதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஓரிரு நாளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விடும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பிரச்சனைக்கு தீர்வு காண்பதே நீதிமன்ற குறிக்கோள் என நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.

1 comment:

  1. Tempory ku vegama apply panina temporary kala temporary job kidachurucha..?Teachers samuthathayam otrumaiya irunthathan elam undu..ilata intha govt la ethuum ila..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி