Science Fact - துருவேறா எஃகில் (stainless steel) இரும்பு கலந்திருந்தாலும், அது ஏன் காந்தத்தால் கவரப்படுவதில்லை ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2019

Science Fact - துருவேறா எஃகில் (stainless steel) இரும்பு கலந்திருந்தாலும், அது ஏன் காந்தத்தால் கவரப்படுவதில்லை ?



ஒரு உலோகத்தின் காந்த அணுக்களை அல்லது காந்த மூலக்கூறுகளை “வெபர் தனிமங்கள் (Weber elements)” என்பர்.

அவை ஒன்றுக்கொன்று இணையாகவும், ஒழுங்குமுறையோடும், அவற்றின் வட துருவம் தென் துருவத்தையும், தென் துருவம் வட துருவத்தையும் நோக்கி அமையும் போது அவ்வுலோகம் காந்தமாக மாறுகிறது அல்லது காந்தத்திற்குரிய பண்புகளைப் பெறுகிறது. மேற்கூறிய நிலைகளில் இருந்து மாறும்போது உலோகம் காந்தப் பண்புகளை இழந்து விடுகிறது. இரும்பின் வெபர்தனிமங்கள் மின்புலத்தை அல்லது மற்றொரு காந்தத்தின் தொடர்பினால் தமக்குள் காந்தப் புலத்தை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவை. தெனவேதான் இரும்பு ஓர் இரும்பியல் காந்தப் பொருள் (Ferro-magnetic material) எனப்படுகிறது. ஓரளவு காந்தத்தன்மையை உடைய அல்லது காந்தத் தன்மையே இல்லாத பொருட்களும் கூட உண்டு. எடுத்துக்காட்டாக குரோமியம் (chromium) காந்ந்த்தன்மைக்குரிய பண்புகளுள் எதையும் கொண்டிராதது; எனவே இவ்வுலோகத்தை எதிர்-இரும்பியல் காந்தப்பொருள் (anti-ferromagnetic material) என்பர். துருவேறா எஃகு பெருமளவு இரும்பைக் கொண்டிருப்பது; இருபது விழுக்காடு குரோமியமும், சிறிதளவு நிக்கல் மற்றும் கரியும் கலந்துள்ளன. துரு பிடிப்பதையும், அரிமானம் உண்டாவதையும் தடுக்கும் பொருட்டு குரோமியம் கலக்கப்படுகிறது. எனவே துருவேறா எஃகு என்பது இரும்பு, குரோமியம், நிக்கல், கரி ஆகியவை கலந்துள்ள கலப்புலோகம் என்பது தெளிவாகிறது. இப்பல்வேறு உலோகங்களின் வெபர் தனிமங்கள் ஒன்றொடொன்று சிதறிப் பரவுவதால் நிகரக் காந்தத்தன்மை பூஜ்யம் என்ற நிலைக்கு வந்து விடுகிறது. எனவே துருவேறா எஃகு காந்தப்பண்புகளை முழுமையாக இழந்து விடுவதால் மற்றொரு காந்தத்தால் கவரப்படுவதில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி